மயக்க வைக்கும் மோட்டோ, விரைவில் இந்தியாவில்..!!
சமீபத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் கருவியின் இந்திய வருகை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாநாட்டில் மோட்டோரோலா விரைவில் இந்தியாவில் மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் கருவி வெளியாகும் என அந்நிறுவனத்தின் இந்திய தலைவர் அமித் போனி தெரிவித்தார்.

இந்தியாவை தொடர்ந்து ஆப்ரிகா, ஆசிய-பசிபிக், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தாண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் கருவியில் 5.4 இன்ச் க்யூஎச்டி டிஸ்ப்ளே மற்றும் ஷேட்டர் ப்ரூப் கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 21 எம்பி ப்ரைமரி கேமராவும், 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர் 3 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1 இயங்குதளமும் கொண்டிருக்கின்றது. 32 மற்றும் 64 என இரு வித மெமரி ஆப்ஷன்கள் கொண்டிருக்கும் இந்த கருவியில் 3760 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications