Home
News

விரைவில் இந்தியா வரும் விரிசல் விழாத ஸ்மார்ட்போன்.!!

By Meganathan

டிராய்டு டர்போ 2 கருவியின் உலகளாவிய மாடலான மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் விரைவில் இந்தியா வர இருப்பதாக அந்நிறுவனம் ட்விட்டர் மூலம் தெரிவித்திருக்கின்றது.

மோட்டோரோலா இந்தியா ட்விட்டர் பக்கத்தில் இத்தகவல் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு டிஸ்ப்ளே உடையாத இந்த கருவியின் வீடியோ ஒன்றையும் அந்நிறுவனம் பதிவு செய்திருக்கின்றது. ஐபோன் 6, சாம்சங் கேலக்ஸி எஸ்6 மற்றும் எக்ஸ்பீரியா இசட் 5 போன்ற கருவிகளுடன் மோட்டோ எக்ஸ் போர்ஸ் திரை ஒப்பிடப்பட்டுள்ளது. வீடியோவினை ஸ்லைடரில் பாருங்கள்.

முன்பு குறிப்பிடப்பட்டிருந்ததை போன்றே மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் கருவியில் வாட்டர் ரெசிஸ்டன்ட் நானோ-கோட்டிங் மற்றும் ஷேட்டர்ப்ரூஃப் டிஸ்ப்ளேவும் வழங்கப்பட்டுள்ளது. மோட்டோரோலாவின் புதிய மோட்டோ எக்ஸ், மோட்டோ ஜி கருவிகளில் வழங்கப்பட்டுள்ளதை போன்றே இந்த கருவியும் தண்ணீர் விபத்துக்களை தாங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஷேட்டர்ப்ரூஃப் டிஸ்ப்ளே அதிகபட்சம் நான்கு ஆண்டுகளுக்கு விரிசல் ஏற்படாது என தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்.

திரை

திரை

ஷேட்டர்ப்ரூஃப் டிஸ்ப்ளே கொண்ட முதல் ஸ்மார்ட்போன் கருவி மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் தான். தவறுதலாக கீழே விழுந்தால் திரையில் விரிசல் ஏற்படாமல் இருக்க ஐந்து அடுக்கு பாதுகாப்பான டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

ஆக்டா கோர் பிராசஸர்

ஆக்டா கோர் பிராசஸர்

இந்த கருவியானது குவால்காமின் உயர் ரக ஸ்னாப்டிராகன் 810 எஸ்ஓசி மற்றும் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் அட்ரினோ 430 ஜிபியு கொண்டிருக்கின்றது.

கேமரா

கேமரா

இந்த கருவியில் 21 எம்பி ப்ரைமரி கேமராவும், 1/2.4" சோனி IMX 230 சென்சார் ஃபேஸ் டிடெக்ஷன் ஆட்டோ ஃபோகஸ் மற்றும் f/2.0 லென்ஸ் பயன்படுத்துகின்றது.

செல்பீ

செல்பீ

இந்த கருவியில் 5 எம்பி செல்பீ கேமரா, வைடு-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 1.4um இருப்பதால் குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான புகைப்படம் எடுக்க முடியும்.

மெமரி

மெமரி

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் கருவியில் 32ஜிபி / 64ஜிபி இன்டர்னல் மெமரி என இரு மாடல்கள் இருக்கின்றது. இருந்தும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் மெமரியை 200ஜிபி வரை நீட்டிக்க முடியும்.

பேட்டரி

பேட்டரி

சுமார் 3760 எம்ஏஎச் பேட்டரி வழங்கியிருப்பதால் சராசரி பயன்பாடுகளிலும் 48 மணி நேரம் பேக்கப் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

சார்ஜிங்

சார்ஜிங்

அதிக திறன் கொண்ட பேட்டரி பொதுவாக சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுக்கும், ஆனால் மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் கருவியில் க்விக் சார்ஜிங் அம்சம் வழங்கப்பட்டிருப்பசால் 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 13 மணி நேரத்திற்கு டாக்டைம் பெற முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சார்ஜிங்

சார்ஜிங்

மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் கருவியில் PMA மற்றும் Qi போன்ற வயர்லெஸ் சார்ஜிங் அம்சங்கள் சப்போர்ட் செய்கின்றது. இருந்தும் வயர்லெஸ் சார்ஜிங் பேடினை வாடிக்கையாளர்கள் தனியாகவே வாங்கி கொள்ள வேண்டும்.

வாட்டர் ரெசிஸ்டன்ட்

வாட்டர் ரெசிஸ்டன்ட்

இந்த கருவியில் வாட்டர் ப்ரூஃப் வசதி கிடையாது ஆனால் நானோ-கோட்டிங் செய்யப்பட்டிருப்பதால் தவறுதலாக தண்ணீர் சேதங்களை எதிர்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிறம்

நிறம்

இந்த கருவி பல்வேறு நிறங்களில் கவர்ச்சிகரமான வடிவமைப்பு மாடல்களில் கிடைக்கின்றது.

வீடியோ

மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் வீடியோ.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Motorola Confirms Moto X Force Launch In India. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X