Home
News

ஒரே நாளில் ஒரு லட்சம் கருவிகள் விற்பனை : வியப்பில் பிரபல நிறுவனம்.!

By Meganathan

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றது. குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதும், விலை அதிகம் கொண்ட கருவிகளுக்கும் எளியத் தவனை முறை வழங்குவதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும். இந்தியாவில் இண்டர்நெட் பயனர்கள் அதிகரிப்பதும் இதற்கு முக்கிய காரணம் எனலாம்.

அமேசானில் கிடைக்கும் 10 மலிவு விலை புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள்

பொதுவாக விலை குறைந்த கருவிகள் அதிகம் வெளியாகும் இந்திய சந்தையில் தனது மூன்றாம் தலைமுறை கருவியினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது லெனோவோ நிறுவனம். கச்சிதமான அம்சங்களைச் சரியான விலையில் வழங்கியதோடு ரிலையன்ஸ் ஜியோ அறிமுக சேவையுடன் வழங்கப்பட்டதால் யாரும் எதிர்பார்க்காதளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

விற்பனை

விற்பனை

லெனோவோ நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ இ3 பவர் கருவியின் விற்பனையைத் திங்கள் நள்ளிரவில் துவங்கியது. நள்ளிரவில் துவங்கினாலும் இதுவரை இல்லாதளவு வரவேற்பு பெற்றுள்ளதாக மோட்டோரோலாவிந் அமித் போனி தெரிவித்துள்ளார்.

ஒரு நாள்

ஒரு நாள்

விற்பனை துவங்கிய முதல் நாளில் மட்டும் சுமார் 1,00,000 மோட்டோ இ3 பவர் கருவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமித் போனி தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

விலை

விலை

இந்திய சந்தையில் ரூ.7,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் மோட்டோ இ3 பவர் கருவியானது பிரத்தியேகமாக பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதிக பேட்டரி பேக்கப் கொண்ட மோட்டோ இ3 பவர் கருவியானது ரிலையன்ஸ் ஜியோ சலுகையை சப்போர்ட் செய்யும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

5இன்ச் எச்டி திரை கொண்ட டிஸ்ப்ளே (720/1280 பிக்சல்), 64-பிட் 1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6735P பிராசஸர் மற்றும் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் (4ஜி+3ஜி) ஸ்லாட் மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளமும் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

தரமுள்ள புகைப்படங்களை வழங்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்பீ கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. அழகிய செல்பீக்களை வழங்கும் பியூட்டிபிகேஷன் மோடு மற்றும் பிரைமரி கேமரா மூலம் 720 பிக்சல் தரம் கொண்ட வீடியோக்களை எடுக்க முடியும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பேட்டரி

பேட்டரி

மோட்டோ இ3 பவர் கருவியில் 3500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. புதிய மோட்டோ இ3 பவர் கருவியுடன் 10 வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜர் ஒன்றும் வழங்கப்படுகின்றது. மேலும் திடீர் மழை மற்றும் நீரில் நனைந்தாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நீரின் மூலம் பாதிக்கப்படாமல் இருக்க வாட்டர்-ரிப்பெல்லண்ட் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை வை-பை 802.11 b/g/n, ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் வி4.0, 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் பிராக்சிமிட்டி, ஆம்பியன்ட் லைட் சென்சார் மற்றும் அக்செல்லோமீட்டர் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சிறப்பு சலுகை

சிறப்பு சலுகை

மோட்டோ இ3 பவர் கருவிகளை வாங்கும் போது சிறப்பு எக்ஸ்சேன்ஜ் சலுகை, மற்றும் எட்டு மாதங்களுக்குச் சிறப்பு தவனை முறை வசதியும் வழங்கப்படுகின்றது. இத்துடன் 32 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.800 வரை கேஷ்பேக் வசதியும் வழங்கப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Motorola Claims it has sold 100,000 Moto E3 Power Smartphones in a Day Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X