வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: களமிறங்கும் ஃபாஸ்ட் டேக் கட்டண முறை!

|

என்.எச்.ஏ.ஐ (NHAI) அண்மையில் அறிவித்துள்ள அறிக்கையின்படி, டிசம்பர் 1 ஆம் தேதி முதல், அனைத்துச் சுங்கச்சாவடிகளும் ஃபாஸ்ட் டேக் முறைக்கு மாற்றப்படும் என்றும், சுங்கச்சாவடி கட்டணங்கள் ஃபாஸ்ட் டேக் மூலம் டிஜிட்டல் முறையில் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார்.

ரேடியோ ஃப்ரீக்குவென்சி ஐடன்டிஃபிகேஷன்

ரேடியோ ஃப்ரீக்குவென்சி ஐடன்டிஃபிகேஷன்

ரேடியோ ஃப்ரீக்குவென்சி ஐடன்டிஃபிகேஷன் (RFID) என்ற தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஒரு சின்ன கோடிங் கொண்ட ஸ்டிக்கர் தான் ஃபாஸ்ட் டேக் என்பது. சுங்கச்சாவடியில் வாகனத்தில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த ஸ்டிக்கர் ஸ்கேன் செய்யப்படும். இந்த ஃபாஸ்ட் டேக் உங்கள் வாங்கி இணையதள வாலெட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

பணம் தானாகக் கழித்துக்கொள்ளப்படும்

பணம் தானாகக் கழித்துக்கொள்ளப்படும்

மொபைல் ரீசார்ஜ் செய்வது போல உங்கள் ஃபாஸ்ட் டேக் கணக்கையும் நீங்கள் ரீசார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சுங்கச்சாவடியைக் கடக்கும் பொழுது இந்த ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யப்பட்டு, உங்கள் கணக்கில் உள்ள பணம் தானாகக் கழித்துக்கொள்ளப்படும். இதனால் பயணிகளின் நேரம் சேமிக்கப்படும், சுங்கச்சாவடியில் கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும்.

விராட் கோஹ்லி அணியும் இந்த ஆடைக்கு இவ்வளவு சிறப்பு இருக்கிறதா? அடேங்கப்பா.!விராட் கோஹ்லி அணியும் இந்த ஆடைக்கு இவ்வளவு சிறப்பு இருக்கிறதா? அடேங்கப்பா.!

ஃபாஸ்ட் டேக் முறை

ஃபாஸ்ட் டேக் முறை

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியதை போல், தேசிய நெடுஞ்சாலையில் ஊழல் அனைத்து லேன்களும் தற்பொழுது ஃபாஸ்ட் டேக் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இனி டோல் கட்டணங்கள் ஃபாஸ்ட் டேக் முறைப்படி டிஜிட்டல் முறையில் மட்டுமே அனைவரிடமும் வசூலிக்கப்படும்.

சார்ஜ் இறங்காத குவாண்டம் பேட்டரி! ப்ளூபிரிண்ட் தயாரித்த விஞ்ஞானிகள்..சார்ஜ் இறங்காத குவாண்டம் பேட்டரி! ப்ளூபிரிண்ட் தயாரித்த விஞ்ஞானிகள்..

அபராதமும் வசூலிக்கப்படும்

அபராதமும் வசூலிக்கப்படும்

ஃபாஸ்ட் டேக் இல்லாமல் பணம் மூலம் கட்டணம் செலுத்த ஒரே ஒரு லேன் மட்டும் கேஷ் வாங்கும் டோலாக செயல்படும் என்றும், பணம் மூலம் டோல் கட்டணம் செலுத்துபவர்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஃபாஸ்ட் டேக் கணக்கில் தொகை இல்லாமல் டோல் கேட்டை கடப்பவர்களுக்குக் கட்டணத்துடன் அபராதமும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Motorists Attention Things to Know About FastTag Payment System : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X