நான் இல்லாம எப்படிங்க.. MotoGP Bharat 2023-க்குள் புகுந்த அம்பானி.. LIVE ஸ்ட்ரீமிங் பொறுப்பு என்து!
உலகளவில் மிகவும் பிரபலமான இரு சக்கர மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயமான மோட்டோஜிபி (MotoGP), முதன்முறையாக இந்தியாவில் நடக்கிறது. இது செப்டம்பர் 22 முதல் 24 வரையிலாக உத்திரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத்த் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் (Buddh International Circuit) நடைபெறுகிறது.
இந்த பந்தயத்தில் உலகெங்கிலும் உள்ள சிறந்த இருசக்கர வாகன ஓட்டுநர்கள் பட்டத்தை வெல்வதற்காக போட்டியிடுவார்கள். மோட்டோஜிபி பாரத் (MotoGP Bharat) என்று பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்வு 2023 எஃப்ஐஎம் மோட்டோஜிபி உலக சாம்பியன்ஷிப்பின் (2023 FIM MotoGP World Championship) 13வது சுற்று ஆகும்.

20 சுற்றுகள் கொண்ட இந்த் சீசன், கடந்த மார்ச் மாதம் போர்ச்சுகலில் (Portugal) தொடங்கியது; வருகிற நவம்பரில் ஸ்பெயினில் (Spain) முடிவடையும். மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஆர்வம் கொண்ட அனைவரையும் ஈர்க்கும் இந்நிகழ்வை, இந்தியா முழுவதும் - ஆன்லைன் வழியாக - லைவ் ஸ்ட்ரீமிங் (Live Streaming) செய்யும் பொறுப்பை யார் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று தெரியுமா?
யார் அது? வேறு யார் நம்ம முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தான்! மொத்தம் மூன்று நாட்கள் நடக்கும் மோட்டோஜிபி பாரத் நிகழ்வின் பயிற்சி போட்டிகள் (Practice sessions) நேற்று நடந்தன. இதனை தொடர்ந்து தகுதிச் சுற்று (Qualifying) மற்றும் ஸ்பிரிண்ட்ரேஸ் (Sprint race) ஆனது செப்.23 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும். அதை தொடர்ந்து செப்.24 (ஞாயிற்றுக்கிழமை) மெயின் ரேஸ் (Main Race) நடைபெறும்.
லைவ் ஸ்ட்ரீமிங் விவரங்கள்: இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் ஜியோசினிமா தளங்கள் (JioCinema Platforms) வழியாக லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படும், அதாவது நேரலையில் ஒளிபரப்பப்படும். நீங்கள் மோட்டோஜிபி பாரத் போட்டிகளை ஜியோசினிமா ஆப் (JioCinema App) வழியாகவும் பார்க்கலாம் மற்றும் ஜியோசினிமா இணையதளம் (JioCinema Website) வழியாகவும் பார்க்கலாம்.
இந்த பந்தயங்களை நேரடியாக பார்க்க முடியுமா? கண்டிப்பாக முடியும்! நீங்கள் மோட்டோஜிபி பாரத் நிகழ்வை நேரடியாக பார்க்க விரும்பினால் ரூ.800 முதல் ரூ.1,80,000 வரையிலான டிக்கெட்டுகளை புக்மைஷோ ஆப் (BookMyShow App) வழியாக வாங்கலாம். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் ஏறக்குறைய 1,00,000க்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி விவரங்கள்: இந்த மோட்டார்ஸ்போர்ட் பந்தயத்தில் அலீக்ஸ் (Aleix Espargaro) எஸ்பர்காரோ மற்றும் ஃபேபியோ குவார்டராரோ (Fabio Quartararo) போன்ற பிரபலமான பந்தய வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. முன்னரே குறிப்பிட்டபடி பயிற்சி போட்டிகள் இன்று (செப்டம்பர் 23 ஆம் தேதி) மாலை 4 மணிக்கு தொடங்கும், மெயின் ரேஸ் ஆனது நாளை (அதாவது செப்டம்பர் 24 ஆம் தேதி) மதியம் 12.30 மணிக்கு தொடங்கும்.
மோட்டோஜிபி பாரத் 2023 நடைபெறும் இடம்: இந்நிகழ்வு 5.15 கிலோமீட்டர் அளவிலான ரேஸ் சர்க்யூட்டை கொண்ட புத்த் சர்வதேச சர்க்யூட்டில் நடைபெறுகிறது. 2010ல் கட்டப்பட்ட இந்த ரேஸ் சர்க்யூட் 2011 முதல் 2013 வரை ஃபார்முலா ஒன் பந்தயங்களை (Formula One Races) நடத்திய பின்னர் நிதி சிக்கல்கள் (Financial issues) காரணமாக பயன்படுத்தப்படாமல் இருந்தது . இப்போது இது மோட்டோஜிபி பந்தயத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டு (Modified) உள்ளது.


Click it and Unblock the Notifications








