அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் மோட்டோ ஸ்மார்ட்போன்கள்.!
மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.16,999-ஆக இருந்தது, தற்சமயம் அமேசானில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு விற்பனை மூலம் ரூ.14,499-க்கு வாங்க முடியும்.
மோட்டோரோலா 45-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு அமேசானில் சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த சிறப்பு விற்பனை மூலம் மோட்டோ ஜி5, மோட்டோ இசெட்2 பிளே மற்றும் மோட்டோ ஜி5எஸ், மோட்டோ ஜி5எஸ் பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சலுகை வரும் ஏப்ரல் 11-ம் தேதி வரை மட்டுமே இருக்கும்.
மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை கொண்டு கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ சலுகையை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமேசானில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி5:
மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு 8,420-க்கு விற்பனை
செய்யப்படுகிறது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ ஜி5 பிளஸ்:
மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.15,999-ஆக இருந்தது, தற்சமயம் அமேசானில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு விற்பனை மூலம் ரூ.9,990-க்கு வாங்க முடியும்.

மோட்டோ ஜி5எஸ்:
மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம் அமேசானில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு
விற்பனை மூலம் ரூ.9,999-க்கு வாங்க முடியும்.

மோட்டோ ஜி5எஸ் பிளஸ்:
மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.16,999-ஆக இருந்தது, தற்சமயம் அமேசானில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு
விற்பனை மூலம் ரூ.14,499-க்கு வாங்க முடியும்.

மோட்டோ இசெட்2 பிளே:
மோட்டோ இசெட்2 பிளே ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.27,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.7,000 வரை விலைகுறைக்கப்பட்டுரூ.20,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications