ஷேட்டர்ஷீல்டு டிஸ்ப்ளே உடன் வெளியிடப்பட்டது மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ்.!
மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.1 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் லெனோவா நிறுவனம் மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் என்ற அட்காசமான ஸ்மார்ட்போனை வெளியிட்டது, மேலும் டூயல் கேமரா மற்றும் ஷேட்டர்ஷீல்டு டிஸ்ப்ளே உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதன்பின் மோட்டோ மாட்ஸ் வசதியை வழங்க பின்புற பேனலில் போகா பின் கனெக்டர்கள் வழங்கப்படுகிறது.
லெனோவா நிறுவனம் இப்போது அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை கைரேகை ஸ்கேனர் மற்றும் கூகுளின் டேடிரீம் விர்ச்சுவல் ரியாலிட்டி வசதி, நேவிகேஷன் போன்ற சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் 7000 சீரிஸ் அலுமினியம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது, அதன்பின் 6.1எம்எம் யுனிபாடி வடிவமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

ஸ்னாப்டிராகன் 835:
மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.1 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட்போன் 5.5-இன்ச் க்யுஎச்டி ஷேட்டர்ஷீல்டு டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (1440-2560)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவகம்:
இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி உடன் வெளிவரும், அதன்பின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வித்தியாசத்தில் இந்தக் கருவி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு மெமரி கூடுதலாக நீட்டிக்கும் வசதி இவற்றில் உள்ளது.

12எம்பி டூயல் கேமரா:
மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 5எம்பி செல்பீ கேமராகொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் உள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வை.பை, ப்ளூடூத், 4ஜி எல்டிஇ,யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் ஸ்மார்ட்போனில் 2730எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது. இதன் விலைப் பொறுத்தவரை ரூ.46,000 இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,அதன்பின்
ஆகஸ்ட் 10ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications