அசத்தல் அம்சங்களுடன் மோட்டோ இசட்(2017).!

மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ இசட் 2017 குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.

By Ilamparidi
|

சமீபத்தில் பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் அனைத்து ஸ்மார்ட்போன் தாயாரிப்பு நிறுவனங்களும் தமது புதிய தாயாரிப்புகளினை அறிமுகப்படுத்தி வெளியிட்டன அதுமட்டுமன்றி அடுத்ததாக தாம் தயாரிக்கவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டன.

இந்த எம்டபுள்யூசி மாநாடானது நடைபெற்ற அத்துணை நாட்களும் ஸ்மார்ட்போன் ஆர்வலர்களிடத்தே பெரும் வரவேற்பினை பெற்றதோடு மட்டுமன்றி அவர்களின் ஸ்மார்ட்போன் குறித்த ஆர்வத்தினுக்கு ஏகப்பட்ட புதிய அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்களினையும் வழங்கியது.

அதன் தொடர்ச்சியாக தற்போது மோட்டோ இசட் 2017 ஸ்மார்ட்போன் புகைப்படங்கள் மற்றும் அதன் அம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.அவை கீழே..

மோட்டோ இசட் 2017:

மோட்டோ இசட் 2017:

ஸ்மார்ட்போன் நிறுவனமானான மோட்டோ ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களிடத்தே தமது தாயாரிப்புகளின் மூலம் ஓர் குறிப்பிடத்தகுந்த நன்மதிப்பினைப் பெற்றுள்ளது.இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மோட்டோ இசட் 2017 குறித்த பல தகவல்கள் கசிந்துள்ளன.

கைரேகை சென்ஸார்:

கைரேகை சென்ஸார்:

மோட்டோ இசட் 2017 ஸ்மார்ட்போன் ஆனது ஓவல் வடிவிலான கைரேகை சென்ஸாரினை பெற்றிருக்கக்கூடுமென கசிந்துள்ள அதன் புகைப்படங்கள் மூலம் யூகிக்கப்படுகிறது.ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு இது பயனுள்ள ஒன்றாகவே இருக்கும்.

எல்டிஇ:

எல்டிஇ:

ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஓசி யுடன் கூடிய மோட்டோ 2017 ஆனது 16 எல்டிஇ அளவினுக்கு அதிவேக இணைய சேவையினை வழங்கக்கூடிய அளவினுக்கு 4x4 மிமோ,256 கியூஏஎம் உயர் ரக மாடுலேஷன் உள்ளியிட்ட சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளது.

மோட்டோ இசட்:

மோட்டோ இசட்:

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மோட்டோ இசட் ஸ்மார்ட்போன் ஆனது 5.5 இன்ச் அமோல்டு டிஸ்பிளே,குவால்கம் 820 எஸ்ஓசி,4 ஜிபி ரேம்,13 எம்பி மெயின் கேமரா,5 எம்பி பிரண்ட் கேமரா,உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் 5.2 எம்எம் எடை உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

வரப்போகுது வாட்ஸ்ஆப் பழைய ஸ்டேட்டஸ் முறை.!

Best Mobiles in India

Read more about:
English summary
Moto Z (2017) Image Leaks With New Fingerprint Sensor; Snapdragon 835 SoC Expected.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X