மார்ஷ்மல்லோ அப்டேட் பெறும் மோட்டோ எக்ஸ் ப்ளே.!!
மோட்டோ ஜி3 கருவியை தொடர்ந்து மோட்டோரோலா நிறுவனத்தின் அடுத்த கருவியும் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ அப்டேட் பெற இருக்கின்றது. அதன்படி இந்தியாவில் மோட்டோ எக்ஸ் ப்ளே பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் பெற முடியும்.

எனினும் இந்த அப்டேட் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மார்ஷ்மல்லோ அப்டேட் வழங்கப்பட்டு சில மாதங்களே ஆகியிருந்த போதும் தற்சமயம் வரை நெக்சஸ், எச்டிசி ஒன் ஏ9 உள்ளிட்ட சில கருவிகளில் மட்டுமே புதிய இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற கருவிகள் பெரும்பாலும் லாலிபாப் இயங்குதளம் கொண்டே இயங்குகின்றன.
தற்சமயம் மோட்டோ எக்ஸ் ப்ளே கருவியிலும் இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளதால் மோட்டோரோலாவின் மூன்று கருவிகளிலும் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி டர்போ மற்றும் சில பழைய மோட்டோ கருவிகளுக்கும் விரைவில் புதிய அப்டேட் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரூ.18,000 பட்ஜெட்டில் வெளியான மோட்டோ எக்ஸ் ப்ளே குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் கொண்டிருப்பதோடு 5.5 இந்ச் திரை மற்றும் ஃபுஎல்எச்டி ரெசல்யூஷன் கொண்டிருப்பதோடு 21 எம்பி ப்ரைமரி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications