மோட்டோரோலாவின் பிரபலமான 5G போனுக்கு நம்ப முடியாத விலை குறைப்பு.!
மோட்டோரோலா நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி82 ஸ்மார்ட்போனுக்கு தான் தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த மோட்டோ போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
விலைகுறைப்பு
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ ஜி82 ஸ்மார்ட்போன் ரூ.21499-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.19,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ ஜி82 போனின் விலை ரூ.22,999-ஆக உள்ளது.

மோட்டோ ஜி82 அம்சங்கள்
மோட்டோ ஜி82 ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் AMOLED ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 x 2400 பிக்சல் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
மோட்டோ ஜி82 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MyUX சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி82 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
மோட்டோ ஜி82 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 30 வாட் டர்போபவர் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது மோட்டோ ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும்.
மோட்டோ ஜி82 ஸ்மார்ட்போனில் 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்ப உள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி82 ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த போனில் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பி வாங்கலாம்
5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், வைஃபை 5, புளூடூத் 5.1, என்எப்சி, 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் மோட்டோ ஜி82 ஸ்மார்ட்போன். குறிப்பாக பட்ஜெட் விலையில் அனைத்து சிறப்பான அம்சங்களையும் வழங்குகிறது இந்த மோட்டோ ஜி82 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் மோட்டோரோலா நிறுவனம் விரைவில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications








