50 எம்பி டிரிபிள் கேமரா, 6ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ ஜி82 5ஜி: விலை என்ன தெரியுமா?

|

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி ஆதரவு மற்றும் 50 எம்பி டிரிபிள் கேமரா உடன் அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனானது ஐரோப்பாவில் இந்திய விலை மதிப்புப்படி ரூ.26,500 என அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனானது மெட்டாரிய்ட் க்ரே மற்றும் வைட் லில்லி வண்ண விருப்பங்களில் வருகிறது.

மோட்டோ ஜி82 5ஜி

மோட்டோ ஜி82 5ஜி

லெனோவுக்கு சொந்தமான பிராண்டான மோட்டோரோலா சமீபத்தில் மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகம் செய்தது. புதிய மோட்டோ ஜி சீரிஸ் தொடரில் இந்த மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த சாதனம் டால்பி அட்மோஸ் ஆதரவுடன் கூடிய டூயல் ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 16 எம்பி செல்பி கேமரா ஆதரவோடு வருகிறது. புதிய மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. மேலும் இதில் கூகுள் அசிஸ்டென்ட் ஆதரவும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 30 வாட்ஸ் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கிறது.

மோட்டோ ஜி82 5ஜி விலை மற்றும் கிடைக்கும் தன்மை

மோட்டோ ஜி82 5ஜி விலை மற்றும் கிடைக்கும் தன்மை

மோட்டோ ஜி82 5ஜி விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இந்த சாதனமானது இந்திய விலை மதிப்புப்படி ரூ.26,500 என வருகிறது. இந்த சாதனம் மெட்டராய்ட் ஆஷ் மற்றும் வைட் லில்லி வண்ண விருப்பத்தில் வருகிறது. புதிய மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனானது இந்தியா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட தேரந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் வரும் வாரங்களில் கிடைக்கக் கூடும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மோட்டோ ஜி82 5ஜி சிறப்பம்சங்கள்

மோட்டோ ஜி82 5ஜி சிறப்பம்சங்கள்

மோட்டோ ஜி82 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்ட் 12 மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) தீர்மானம் மற்றும் அமோலெட் டிஸ்ப்ளே உடன் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது டிசிஐ பி3 வண்ண வரம்பு ஆதரவோடு வருகிறது. இந்த மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி ஆதரவோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனானது எல்இடி ஃபிளாஷ் ஆதரவோடு வருகிறது. மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனானது மூன்று பின்புற கேமரா யூனிட்டைக் கொண்டிருக்கிறது. மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி பிரதான கேமரா ஆதரவு, 8 எண்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆதரவோடு வருகிறது. பின்புற கேமரா ஆனது யூனிட் பர்ஸ்ட் ஷாட், ஏஆர் ஸ்டிக்கர்கள், போர்ட்ரெய்ட் மோட், நைட் விஷன், லைவ் ஃபோட்டோ மற்றும் பனோரமா மோட் உள்ளிட்ட ஆதரவோடு வருகிறது. மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என 16 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர் வசதி மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சம்

கைரேகை ஸ்கேனர் வசதி மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சம்

புதிய மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனானது 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மைக்ரோ எஸ்டி கார்ட் ஆதரவோடு வருகிறது. இதன் மூலம் 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். மோட்டோ ஜி82 5ஜி இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், வைஃபை, ப்ளூடூத் வி5.1, யூஎஸ்பி டைப் சிபோர்ட் ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் கூகுள் அசிஸ்டென்டிற்கான ஆதரவைக் கொண்டிருக்கிறது. மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பாதுகாப்பு அம்சத்துக்கு என கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. கூடுதலாக ஃபேஸ் அன்லாக் அம்சமும் இருக்கிறது.

30 வாட்ஸ் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

30 வாட்ஸ் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனானது 30 வாட்ஸ் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது டஸ்ட் மற்றும் வாட்டர் எதிர்ப்பு ஆதரவோடு வருகிறது. இதில் ஐபி 52 மதிப்பீடு ஆதரவு இருக்கிறது. மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனில் டால்பி அட்மாஸ் ஆதரவுடன் கூடிய இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Moto G82 5G Smartphone announced with Snapdragon 695 5G Soc, 50Mp Triple Camera and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X