6.4-இன்ச் டிஸ்பிளே, மூன்று ரியர் கேமரா: அசத்தலான மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன் மாடலை பிரேசிலில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

1560 x 720 பிக்சல் திர்மானம்
மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1560 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதி
மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10
இயங்குதளத்தை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி
இந்த மோட்டோ ஜி8 சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும்கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

16எம்பி பிரைமரி லென்ஸ்
இந்த ஸ்மாரட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோசென்சார் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி
பிளாஸ் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் அடக்கம்.

4000எம்ஏஎச் பேட்டரி
மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது,மேலும் 10வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும்
டூயல் 4ஜி வோல்ட்இ,புளூடூத் 5, வைஃபை 802.11 பி / ஜி / என், ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி 3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம். மேலும் இந்த சாதனம் விரைவில் இந்தியாவிலும்
அறிமுகம் செய்யப்படும், ஒருவேளை இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டால் ரூ.18,340-விலையில்
விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications