Best 5G Phone என்கிற லிஸ்டில் உள்ள இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.4,000 விலைக்குறைப்பு!

|

தற்போதைக்கு இந்தியாவில் வாங்க கிடைக்கும் 'பெஸ்ட் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்'களின் பட்டியலில், மோட்டோ ஜி71 5ஜி (Moto G71 5G) மாடலுக்கு நிச்சயமாக ஒரு இடமுண்டு.

அந்த 'ரேஞ்சில்' இருக்கும் ஒரு ஸ்மார்ட்போனின் மீது திடீரென்று விலைக்குறைப்பு அறிவிக்கப்படுகிறது என்றால், அதுவும் இந்த ஆண்டு அறிமுகமான ஒரு ஸ்மார்ட்போனின் மீது ரூ.4,000 என்கிற 'ப்ரைஸ் கட்' கிடைக்கிறது என்றால், நிச்சயம் அதை கவனத்தில் கொள்ள வேண்டும்!

இந்த ஆபரை ஏன் கவனத்தில் கொள்ள வேண்டும்? என்பது மட்டுமல்ல, இதை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்கிற சில காரணங்களும் எங்களிடம் உள்ளன. மேலும் இதை வாங்காமல் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்களை வாங்கலாம் என்கிற எங்களின் பரிந்துரையும் இக்கட்டுரையில் உள்ளது.

இந்த ஆபர் ஏன் முக்கியமானது?

இந்த ஆபர் ஏன் முக்கியமானது?

ஏனெனில் முன்னரே குறிப்பிட்டபடி - மோட்டோ ஜி71 5ஜி ஆனது இந்த ஆண்டு ஜனவரியில் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது விலையை மீறிய சில 'ஹை-எண்ட்' அம்சங்களையும் வழங்குகிறது.

அதாவது ஃபுல்-எச்டி+ ரெசல்யூஷனை வழங்கும் 6.4-இன்ச் அளவிலான AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 695 5G SoC மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்ட 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்கிறது.

Samsung, OnePlus, Xiaomi உட்பட 12 போன்கள் மீது தாறுமாறான விலைக்குறைப்பு; இதோ லிஸ்ட்!Samsung, OnePlus, Xiaomi உட்பட 12 போன்கள் மீது தாறுமாறான விலைக்குறைப்பு; இதோ லிஸ்ட்!

பழைய விலை மற்றும் புதிய விலை!

பழைய விலை மற்றும் புதிய விலை!

மோட்டோரோலாவின் மோட்டோ ஜி71 5ஜி ஆனது ரூ.19,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகமானது. ஆனால் தற்போது ரூ.4,000 என்கிற விலைக்குறைப்பை பெற்று ரூ.15,999 முதல் வாங்க கிடைக்கிறது.

Flipkart-இல் அமோகமாக நடக்கும் விற்பனை!

Flipkart-இல் அமோகமாக நடக்கும் விற்பனை!

பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.15,999 க்கு விற்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி, நீங்களொரு எஸ்பிஐ கிரெடிட் கார்டு யூசர் என்றால், உங்ககுக்கு மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனின் மீது கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனின் விலையை ரூ.14,999 ஆக குறைக்கலாம்.

இந்த லேட்டஸ்ட் மோட்டோரோலா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆர்க்டிக் ப்ளூ மற்றும் நெப்டியூன் கிரீன் என்கிற இரண்டு கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதுவரை வந்த எந்த OnePlus போனிலும் இதுவரை வந்த எந்த OnePlus போனிலும் "இது" இல்லை; இன்னும் 2 வாரம் தான்!

இது ரொம்ப நாள் நீடிக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

இது ரொம்ப நாள் நீடிக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

இது மோட்டோவின் ஒரு பெஸ்ட் ஸ்மார்ட்போன் என்பதாலும், ரூ.4,000 என்பது மிகப்பெரிய விலைக்குறைப்பு என்பதாலும் இந்த ஆபர் நீண்ட காலம் நீடிக்காது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம் மற்றும் இதன் பிரபலத்தன்மையை கருத்தில் கொண்டு, இது விரைவில் கையிருப்பில் இல்லாமல் போகலாம் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

அதாவது நீங்கள் மோட்டோ ஜி71 5ஜி மீதான இந்த ஆபரை பயன்படுத்திக்கொள்ள விரும்பினால், கொஞ்சம் வேகமாக செயல்படவும்.

அடிச்சு பிடிச்சு வாங்குற அளவு இது வொர்த்-ஆ!

அடிச்சு பிடிச்சு வாங்குற அளவு இது வொர்த்-ஆ!

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இதன் ஸ்டைலான டிசைன், தரமான டிஸ்பிளே, க்ளீன் ஆன சாஃப்ட்வேர் இன்டர்பேஸ், எதிர்பார்ப்பதை விட அதிகமாக நீளும் பேட்டரி லைஃப், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், எஸ்டி 695 சிப்செட்டின் தரமான செயல்திறன் போன்றவைகளை கருத்தில் கொண்டால் இதை அடித்து பிடித்து வாங்குவதில் தவறே இல்லை.

பாதகங்களை பற்றி பேசினால்.. பெரிதாக ஒன்றும் இல்லை. கேமராக்கள் கொஞ்சம் சுமாராக உள்ளது. குறிப்பாக லோ-லைட்டில்; அவ்வளவு தான்!

பட்ஜெட் விலையில் 2K டிஸ்பிளே, 8340mAh பேட்டரி; Samsung-ஐ மிரட்டும் புதிய Realme Pad!பட்ஜெட் விலையில் 2K டிஸ்பிளே, 8340mAh பேட்டரி; Samsung-ஐ மிரட்டும் புதிய Realme Pad!

மோட்டோ ஜி71 5ஜி: வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

மோட்டோ ஜி71 5ஜி: வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

மோட்டோ G71 5G ஒரு பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடனான 6.4 இன்ச் அளவிலான AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான MyUX லேயர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்டை 6ஜிபி ரேம் உடன் பேக் செய்கிறது. தவிர இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் ஆனது 5,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, Moto G71 5G ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி ஷூட்டர் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

Moto G71 5G ஸ்மார்ட்போனில் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது 5ஜி, 4ஜி LTE, வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவைகளை வழங்குகிறது.

மோட்டோ ஜி71 5ஜி-க்கு பதில் வேறு என்னென்ன மாடல்களை கருத்தில் கொள்ளலாம்?

மோட்டோ ஜி71 5ஜி-க்கு பதில் வேறு என்னென்ன மாடல்களை கருத்தில் கொள்ளலாம்?

இதே விலை வரம்பின் கீழ் வேறு சில 'ஆல்டர்நேட்டிவ் ஆப்ஷன்'களை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், Redmi Note 11T 5G, Realme 8s 5G மற்றும் iQoo Z3 போன்ற ஸ்மார்ட்போன்களை பார்க்கலாம்.

Vivo T1x இந்திய அறிமுகம் உறுதி; பல பட்ஜெட் போன்களை வச்சி செய்ய போகுது!Vivo T1x இந்திய அறிமுகம் உறுதி; பல பட்ஜெட் போன்களை வச்சி செய்ய போகுது!

சமீபத்தில் அறிமுகமான Moto G42 எப்படி இருக்கு?

சமீபத்தில் அறிமுகமான Moto G42 எப்படி இருக்கு?

நினைவூட்டும் வண்ணம், மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் தான் அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ ஜி42 மாடலை அறிமுகப்படுத்தியது.

Moto G42 ஆனது ஒரு 4GB ரேம் + 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999 ஆகும்.

Flipkart வழியாக வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் மீது SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான ரூ.1,000 என்கிற தள்ளுபடியும் அணுக கிடைக்கிறது.

Photo Courtesy: Motorola, Realme

Best Mobiles in India

English summary
Moto G71 5G Price Reduced in India Should You Use This Offer Here is Our Suggestion

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X