ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் களமிங்கும் மோட்டோ ஜி7.!
மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் 16எம்பி +5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 12எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மாரட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது அவற்றைப் பார்ப்போம்.

டிஸ்பிளே
மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதி கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்தால் பயன்படுத்துவதற்கு மகிவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:
மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் 16எம்பி +5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 12எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம் இதில் அடக்கம்.

பேட்டரி:
மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் பொதுவாக 5000எம்ஏஎச் பேட்டரி ஆரவுடன் வெளிவரும்,பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம். மேலும் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்டபோன் மாடல் வெளிவரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications