நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி5எஸ்.!
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோரோலாவின் மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதுää மேலும் இந்த அட்டகாசமான சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக இப்போது மோட்டோ ஜி5எஸ் சாதனத்திற்கு
அறிவிக்கப்பட்டுள்ள விலைகுறைப்பு ஆஃபர் வரும் ஏப்ரல் 11-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலைகுறைக்கப்பட்ட மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை அமேசான் இந்தியா வலைதளத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் சாம்பல் மற்றும் ஃபைன் கோல்ட் நிறங்களில் வருகிறது இந்த மோட்டோ ஜி5எஸ் சாதனம்.

விலைகுறைப்பு:
மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போன் மாடல் கடந்த ஆண்டு 14,999-என்ற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் ரூ.5,000 வரை
விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோ ஜி5எஸ் :
மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல்
தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1
மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும்இந்த மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. வீடியோ கேம், ஆப் போன்ற வசதிகளுக்கு மிக அருமையா இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்
மாடல்.

16எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா
5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications