மோட்டோ ஜி5எஸ் பிளஸ், மோட்டோ ஜி5எஸ், மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
மோட்டோ ஜி 5 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தற்காலிக விலைக் குறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி விலைகுறைப்பில் வரும் ஸ்மார்ட்போன் மாடல்களை அமேசான் வலைதளத்தில் மிக எளமையாக வாங்க முடியும். மோட்டோரோலா வழங்கும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனம் அறிவித்துள்ள இந்த சலுகை பிப்ரவரி 13-ம் தேதி முதல் பிப்ரவரி 15-வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுளளது. மேலும் இதனுடன் எக்சேஞ்ச் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி5எஸ் பிளஸ்:
மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.16,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-க்கு
விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோ ஜி5எஸ்:
மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-க்கு
விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோ ஜி5:
மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,499-க்கு
விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோ ஜி5எஸ் பிளஸ் (அம்சங்கள்):
மோட்டோ ஜி 5 எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 1080 பிக்சல்
தீர்மானம் மற்றும் 18:9என்ற திரைவிகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் இவற்றுள் அடக்கம். 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா
ஆதரவு கொண்டுள்ளது மோட்டோ ஜி 5 எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ ஜி5எஸ் (அம்சங்கள்):
மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது,
அதன்பின்பு ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போன் மாடல். 16எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 3000எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போன்.


மோட்டோ ஜி5 (அம்சங்கள்):
மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போன் 5-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 2800எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications