மோட்டோ ஜிஎஸ் ப்ளஸ் : சின்ன லீக்ஸ் தான், ஆனால் பெரிய மேட்டர்கள் வெளியானது.!

|

மோட்டோ ஜிஎஸ் மற்றும் ஜிஎஸ் + ஆகிய இரண்டு கருவிகள் பற்றிய விவரக்குறிப்புகளை உள்ளடக்கிய மோட்டோரோலா ப்ரேசெண்டேஷன் ஸ்லைடர் ஒன்று ட்விட்டரில் ஈவன் பிளாஸ் மூலம் கசிந்துள்ளது.

மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் மோட்டோ ஜி 5எஸ் மற்றும் மோட்டோ ஜி 5 எஸ் பிளஸ் என்று அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இக்கருவிகள் அம்சங்கள், வண்ண மாறுபாடுகள் சார்ந்த சுவாரசியமான தகவலும் வெளியாகியுள்ளது. அதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

வண்ண மாறுபாடு

வண்ண மாறுபாடு

வெளியான தகவலின் கீழ் மோட்டோ ஜி 5 எஸ் பிளஸ் ஆனது தங்கம், சாம்பல், வெள்ளி (வெள்ளை முன்பக்கம்), மற்றும் தங்கம் (வெள்ளை முன்பக்கம்) ஆகிய வண்ண மாறுபாடுகளில் படங்களை வெளியாகியுள்ளது.

மாற்றம்

மாற்றம்

மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஆனது மோட்டோ ஜி5 வரிசையில் பார்த்த அதே வடிவமைப்பை பெற்றுள்ளது. எனினும், மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்றையும் இக்கருவி கொண்டுள்ளது. அதாவது எந்தவொரு மோட்டோரோலா ஸ்மார்ட்போனிலும் இல்லாத இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டு வரும் முதல் கருவி இதுவாகும் என்பது போல தெரிகிறது.

இரட்டை பின்புற கேமரா

இரட்டை பின்புற கேமரா

குறிப்பிட்ட இரட்டை பின்புற கேமராக்கள் இரட்டை எல்இடி ஃப்ளாஷ் கொண்டிருக்கும், மற்றும் 1080பி வீடியோ பதிவு ஆதரிக்கும் என்றும் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் கருவியானது ஒற்றை எல்இடி ஃபிளாஷ் உடனான முன் கேமரா கொண்டிருக்கும் என்று வெளியான லீக்ஸ் தகவல் கூறுகிறது.

எச்டி டிஸ்பிளே

எச்டி டிஸ்பிளே

இக்கருவிகள் அம்சங்களை பொறுத்தமட்டில் ஜி5எஸ் பிளஸ் ஆனது 1920 × 1080 பிக்சல்கள் என்ற ஒரு தீர்மானம் கொண்ட ஒரு 5.5 அங்குல முழு எச்டி டிஸ்பிளே கொண்டிருக்கலாம், உடன் பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும்.

ப்ராசஸர்

ப்ராசஸர்

மெட்டல் யூனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ள இக்கருவி முன்பக்கம் எதிர்கொள்ளும் கைரேகை ஸ்கேனரை ஹோம் பொத்தானில் கொண்டிருக்கலாம். மேலும், மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஒரு 64-பிட், ஆக்டா-கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் என்ற விவரங்கள் வெளியாகியுள்ள போதிலும் எஸ்ஓசி, ரேம் மற்றும் உள் சேமிப்புகளின் விவரங்கள் இப்போது தெரியவில்லை.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

முன்னதாக, மோட்டோ ஜி5எஸ் சார்ந்து வெளியான தகவலின் கீழ் மோட்டோ ஜி5எஸ் மற்றும் ஜி5எஸ் ப்ளஸ் ஆகிய இரண்டு கருவிகளுமே ஒரேபோல இருக்கும் அதாவது இரட்டை பின்புற கேமரா தவிர மெட்டல் யூனிபாடி வடிவமைப்பு, ஹோம் பொத்தானில் ஒரு கைரேகை ஸ்கேனர் போன்றவைகளில் ஒத்திருக்கும் என்று கூறுகிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

மறுபக்கம் மோட்டோ ஜி5எஸ் ஆனது முன்னணி எல்இடி ஃப்ளாஷ் மற்றும் 1920 × 1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.2 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது, இதர விவரங்கள் அறியப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Moto G5S Plus leaked images reveal dual rear camera setup. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X