அமேசான் : மோட்டோ ஜி5எஸ் & ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
மோட்டோ ஜி5எஸ் பிளஸ் டூயல் ரியர் கேமரா பொறுத்தவரை 13மெகாபிக்சல் கொண்டுள்ளது, அதன்பின் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
தற்சமயம் அமேசானில் மோட்டோ ஜி5எஸ் மற்றும் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது,
இதனுடன் எக்ஸ்சேன்ஞ் ஆஃபர் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோ ஜி5எஸ் மற்றும் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இப்போது ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்து.

விலைகுறைப்பு:
மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-க்கு விற்பனை
செய்யப்படுகிறது. அதன்பின்பு மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.15,999-ஆக இருந்தது, தற்சமயம் விலை
குறைக்கப்பட்டு ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோ ஜி5எஸ் பிளஸ்:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டவையாக உள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது. மேலும் 4ஜி எல்டிஇ ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி5எஸ் பிளஸ் செயலி:
ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது மோட்டோ ஜி5எஸ் பிளஸ். மேலும் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

டூயல் ரியர் கேமரா:
மோட்டோ ஜி5எஸ் பிளஸ் டூயல் ரியர் கேமரா பொறுத்தவரை 13மெகாபிக்சல் கொண்டுள்ளது, அதன்பின் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

மோட்டோ ஜி5எஸ் :
இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டவையாக உள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது.
மேலும் 4ஜி எல்டிஇ ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்

மோட்டோ ஜி5எஸ் செயலி:
ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது மோட்டோ ஜி5எஸ் . மேலும் 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம்
ஸ்னாப்டிராகன் 625 செயலியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி5எஸ் ரியர் கேமரா:
மோட்டோ ஜி5எஸ் ரியர் கேமரா பொறுத்தவரை 16மெகாபிக்சல் கொண்டுள்ளது, அதன்பின் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக்கூறப்படுகிறது.
மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications