புதிய மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன் அறிமுகமா? இந்தியாவில் எப்போது கிடைக்கும்?
மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.

இந்த சாதனம் 720 x 1600 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சறிந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன். மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் தனித்துவமான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பிசெல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
விரைவில் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒருஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது. மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.
பின்பு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு, புளூடூத் 5.2, வைஃபை 6, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனம் விரைவில் அனைத்து நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் விரைவில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 5ஜி சேவை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் பல நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம்செய்து வருகிறது. மேலும் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறதுஇந்த அசத்தலான மோட்டோரோலா நிறுவனம். இந்திய அறிமுகத்தை சரியான நேரம் இன்னும் வெளியாகாத நிலையில், இந்த சாதனம் மிக விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications