Home
News

50எம்பி ரியர் கேமராவுடன் அசத்தலான மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 6.8-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல்
தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை
அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன்.

50எம்பி பிரைமரி சென்சார்

மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் தனித்துவமான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பிசெல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட்

மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். விரைவில் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஸ்மார்போனில்

இந்த புதிய மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒருஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

5000 எம்ஏஎச்

மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு,

மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு, புளூடூத் 5.2, வைஃபை 6, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனம் விரைவில் அனைத்து நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் விரைவில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 5ஜி சேவை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் பல நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம்செய்து வருகிறது. மேலும் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறதுஇந்த அசத்தலான மோட்டோரோலா நிறுவனம்.

 மோட்டோ ஜி200

மோட்டோ ஜி200

மேலும் இந்நிறுவனம் விரைவில் மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போனின் அமசங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். . குறிப்பாக இந்த சாதனத்தின்வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மோட்டோ ஜி200

மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போனில் 108எம்பி மெயின் கேமரா + 13எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி200. மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். குறிப்பாக கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன மிக அருமையாக செயல்படும். அதேபோல் இந்த மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது.

 6000 எம்ஏஎச்

மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், வைஃபை உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Moto G51 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X