'இந்த' அம்சத்துடன் இந்தியாவில் களமிறங்கும் முதல் போன் Moto G51 5G மட்டும் தான்.. நீங்க வாங்க ரெடியா?

|

மோட்டோரோலா நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கான போர்ட்ஃபோலியோவில் மற்றொரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடலை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் அதிநவீனமான ஒரு முக்கிய புதிய அம்சத்துடன் வெளியாகியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மோட்டோரோலா அறிமுகம் செய்துள்ள புதிய Moto G51 5G ஸ்மார்ட்போன் பற்றிய சுவாரசியமான தகவல் மற்றும் விலை தகவலை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

புதிய Moto G51 5G ஸ்மார்ட்போன்

புதிய Moto G51 5G ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா அறிமுகம் செய்துள்ள புதிய Moto G51 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலை பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டோ ஜி52 5ஜி ஸ்மார்ட்போன் மாடலானது இந்தியாவில் வெறும் ரூ. 14,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 5G சாதனம் சமீபத்திய Qualcomm Snapdragon 480+ 5G மொபைல் இயங்குதளத்தைக் கொண்டுள்ள இந்தியாவின் முதல் ஸ்மார்ட்ஃபோன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இது வரை எந்த ஸ்மார்ட்போன் மாடலிலும் கண்டிடாத வசதி

இந்தியாவில் இது வரை எந்த ஸ்மார்ட்போன் மாடலிலும் கண்டிடாத வசதி

இது மோட்டோரோலாவின் முந்தைய ஸ்மார்ட்போன் முன்னோடிகளை விட மிகவும் வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய Qualcomm Snapdragon 480+ சிப்செட் மேம்படுத்தப்பட்ட செயல்திறன் மற்றும் சிறந்த வினைத்திறனை வழங்குகிறது. இந்த Moto G51 முன்பு ஐரோப்பாவில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இது வரை எந்த ஸ்மார்ட்போன் மாடலும் இந்த சமீபத்திய ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட்டை கொண்டிருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

DOT திடீர் அதிரடி அறிவிப்பு: உங்ககிட்ட எத்தனை சிம் உள்ளது.. இதற்கு மேல் 'சிம்' இருந்தால் இணைப்பு துண்டிப்பு..DOT திடீர் அதிரடி அறிவிப்பு: உங்ககிட்ட எத்தனை சிம் உள்ளது.. இதற்கு மேல் 'சிம்' இருந்தால் இணைப்பு துண்டிப்பு..

Moto G51 5G ஸ்மார்ட்போனின் சிறம்பம்சம் மற்றும் முழு விவரக்குறிப்புகள்

Moto G51 5G ஸ்மார்ட்போனின் சிறம்பம்சம் மற்றும் முழு விவரக்குறிப்புகள்

மோட்டோரோலாவின் இந்த புத்தம் புதிய சாதனமானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.8' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் ஸ்டாக் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் இயங்குதளத்துடன் வருகிறது. இது IP52 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வடிவமைப்பில் வருகிறது. புதிய மோட்டோ ஜி51 5ஜி சாதனம் மோட்டோரோலா திங்க்ஷீல்ட் வணிகப் பாதுகாப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது பயனரின் தகவலை பாதுகாக்கக் கூடுதல் வலிமை சேர்க்கிறது. குறிப்பாக இது பயனர் தரவைப் பாதுகாக்க உயர்-நிலை குறியாக்கத்தை பயன்படுத்துகிறது.

புதிய Moto G51 5G ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம்

புதிய Moto G51 5G ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம்

இந்த புதிய ஸ்மார்ட்போனின் கேமரா அம்சத்தைப் பற்றிப் பார்க்கையில், இந்த புதிய Moto G51 5G ஸ்மார்ட்போன் 50 எம்பி குவாட் செயல்பாடு கொண்ட கேமரா அமைப்புடன் கூடிய டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது குவாட் பிக்சல் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது புகைப்படங்களுக்கு நான்கு மடங்கு சிறந்த குறைந்த ஒளி உணர்திறனை பயனருக்கு உறுதியளிக்கிறது. f2.4 துளையுடன் கூடிய 8 எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் உள்ளது. இது ஒரு நிலையான லென்ஸை விட நான்கு மடங்கு அதிகமாகச் சட்டகத்தில் பொருத்துகிறது.

Jio, Airtel, Vi, BSNL: 84 நாட்களுக்கு இவ்வளவு டேட்டா.. அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் எக்ஸ்ட்ரா நன்மைகள்..!Jio, Airtel, Vi, BSNL: 84 நாட்களுக்கு இவ்வளவு டேட்டா.. அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் எக்ஸ்ட்ரா நன்மைகள்..!

கேமரா லென்ஸ்களின் சிறப்பு என்ன தெரியுமா?

கேமரா லென்ஸ்களின் சிறப்பு என்ன தெரியுமா?

மேக்ரோ விஷன் அம்சத்துடன் கூடிய கேமரா இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு ஈர்ப்பாகும். பின்புற கேமரா முறைகளில் இரட்டைப் பிடிப்பு, ஸ்பாட் கலர் புகைப்படம் எடுத்தல், மேக்ரோ புகைப்படம் எடுத்தல் மற்றும் ஸ்மாய்லின் பேஸ் கேப்ச்சர் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இணைப்பைப் பொறுத்தவரை, Moto G51 ஆனது 5G இன் 12 பேண்டுகளை ஆதரிக்கிறது. இது 15K பிரிவு ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சமாக 5G நெட்வொர்க் பேண்ட் ஆதரவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மற்ற விருப்பங்களைப் பற்றிப் பார்க்கையில் இது Wi-Fi 802.11ac, Bluetooth v5.1 மற்றும் NFC ஆகியவற்றை அடக்கியுள்ளது.

Moto G51 5G ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் விருப்பம்

Moto G51 5G ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் விருப்பம்

ஸ்டோரேஜ் விருப்பத்தைப் பற்றிப் பார்க்கையில் இது 4 GB LPDDR4X ரேம் உடன் கூடிய 64 ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பகத்துடன் வருகிறது. இந்த சாதனம் சிறப்பான செயல்திறனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி சேமிப்பகத்தை 512 ஜிபி வரை விரிவாக்க முடியும். இந்த பட்ஜெட் மோட்டோ ஃபோன் 5000 mAh பேட்டரியில் இயங்குகிறது. இது சுமார் 30 மணிநேரம் வரை நீடித்து நிலைக்கும் பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்வதற்கு, இது 20W டர்போ பவர் சார்ஜருடன் வருகிறது.

PF விதி மாற்றம்: உங்கள் EPF கணக்கில் கிடைக்கும் ரூ. 7 லட்சம் இலவச பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?PF விதி மாற்றம்: உங்கள் EPF கணக்கில் கிடைக்கும் ரூ. 7 லட்சம் இலவச பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Moto G51 5G போட்டியாக எந்த ஸ்மார்ட்போன் செயல்படும் தெரியுமா?

Moto G51 5G போட்டியாக எந்த ஸ்மார்ட்போன் செயல்படும் தெரியுமா?

Moto G51 5G ஸ்மார்ட்போன் இண்டிகோ ப்ளூ மற்றும் பிரைட் சில்வர் ஆகிய இரண்டு வண்ண வகைகளில் விற்பனைக்கு வருகிறது. இந்த புதிய மோட்டோ ஜி51 5ஜி சாதனம் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் Flipkart இல் பிரத்தியேகமாக விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதன் மலிவு விலையில், Moto G51 5G ஆனது OPPO A55 மற்றும் Samsung Galaxy F42 5G போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் உங்களுக்குப் பிடித்திருந்தால், இந்த புதிய மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்கத் திட்டமிட்டிருந்தால் டிசம்பர் 16 ஆம் தேதியை உங்கள் காலெண்டரில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

மோட்டோரோலாவின் மற்ற ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிந்துகொள்ள

மோட்டோரோலாவின் மற்ற ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிந்துகொள்ள

மோட்டோரோலாவின் மற்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் மற்றும் பிற பிராண்ட்களின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களின் சுவாரசியமான தகவல்கள் மற்றும் அவற்றின் விலை பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனலை கிளிக் செய்யுங்கள். தொழில்நுட்பம், அறிவியல், விண்வெளி மற்றும் பூமி தொடர்பான கூடுதல் செய்திகளுக்கு எங்கள் பக்கத்தில் உள்ள மற்ற பதிவுகளையும் பார்வையிடுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Moto G51 5G Is The First Device To Be Launched In India With Snapdragon 480 Plus Chipset Feature : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X