Home
News

நோக்கியா, எல்ஜி, மோட்டோ-வின் அடுத்த மாத ரீலீஸ் என்னென்ன.?

மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் - வர்த்தக கண்காட்சியில் லெனோவா, சியோமி மற்றும் எல்ஜி போன்ற 27 மேஜர் உற்பத்தியாளர்கள் தங்களின் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன்களை அறிவிக்கவுள்ளனர்.

By Muthuraj

ஸ்மார்ட்போன்களின் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சியான மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (MWC) 2017 நிகழ்வானது அடுத்த மாதம் பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 2-ஆம் தேதி வரை நிகழும். இந்த வர்த்தக கண்காட்சியில் லெனோவா, சியோமி மற்றும் எல்ஜி போன்ற 27 மேஜர் உற்பத்தியாளர்கள் தங்களின் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன்களை அறிவிக்கவுள்ளனர்.

இந்த ஆண்டு எக்ஸ்போவில் ஸ்மார்ட்போன்கள் தவிர்த்து மற்ற பக்கத்திலும் நிறுவனங்கள் கவனம் செலுத்த உள்ளன. அதாவது செயற்கை நுண்ணறிவு, செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மற்றும் சாத்தியமான ஒரு புதிய வடிவம் கொண்ட வளையக்கூடிய திரைகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை பார்க்க வாய்ப்பு இருக்கிறது. மறுபக்கம், இந்த எக்ஸ்போவில் எந்தெந்த நிறுவனங்களின் என்னென்ன கருவிகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகிக் கொண்டேப்போகிறது. அப்படியாக, அடுத்த மாதம் ஸ்மார்ட்போன் உலகின் சிறந்த உற்பத்தியாளர்களிடம் இருந்து அறிமுகமாக வாய்ப்புள்ள கருவிகளை பற்றிய தொகுப்பே இது.

எல்ஜி ஜி6

எல்ஜி ஜி6

ஒரு 5.7-அங்குல (2880 x 1440) க்வாட் எச்டி + எல்சிடி டிஸ்ப்ளே காட்சி கொண்டு ஒரு சூப்பர் கூர்மையான மற்றும் "அதிவேக அனுபவத்தை" வழங்கும் 564பிபிஐ பிக்சல் அடர்த்தி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படும் இக்கருவி 18:9 என்ற திரை விகிதத்தில் வெளிவரும் முதல் கருவியாக இருக்கும்.

மோட்டோ ஜி5 ப்ளஸ்

மோட்டோ ஜி5 ப்ளஸ்

ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625 செயலி, 4ஜிபி ரேம், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக நீட்டிப்பு ஆதரவு கொண்ட 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு, 13எம்பி பின்புற கேமரா, 5 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா, 3080எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்க கூடும் உடன் ஒரு கைரேகை ஸ்கேனர் உள்ளடக்கமாக இருக்கும் என்று இக்கருவிகளின் அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும் விரிவான விவரங்களுக்கு..

பிளாக்பெர்ரி மெர்குரி

பிளாக்பெர்ரி மெர்குரி

மெர்குரி என்பது இக்கருவியின் உண்மையான பெயர் இல்லை என்றாலும் கூட பிளாக்பெர்ரி மெர்குரி ஆனது தொடு உணர் பாடி கீபேட் கொண்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வன்பொருள் குறிப்புகளை பொருத்தமட்டில் ஸ்னாப்டிராகன் 625 செயலி, 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வரை உள்ளடக்க நினைவகம் கொண்டு வரும் கூறுபடுகிறது.

நோக்கியா 8

நோக்கியா 8

நோக்கியா 6 போன்று மிட் ரேன்ஜ் கருவியாக இல்லாமல் நோக்கியா 8 கருவியானது நிறுவனத்தின் உயர் இறுதி ஸ்மார்ட்போனாக வடிவமைக்க நோக்கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வடிவமைப்பு அடிப்படையில், அது தண்ணீர் மற்றும் தூசி பாதுகாப்புக்கான ஐபி68 மதிப்பீடு கொண்டிருக்க முடியும். வன்பொருள் குறிப்புகளை பொருத்தமட்டில் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 மற்றும் 6ஜிபி ரேம் கொண்டிருக்கலாம்.

சியோமி மி 6

சியோமி மி 6

க்வால்காம் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஆன ஸ்னாப்டிராகன் 835 கொண்டு ஐயனாகும் இரண்டாவது மாதிரியான இதில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க சேமிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. மி 5 அக்கருவி முதலில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (MWC) 2016-ல் தன அறிமுகமானது அதே போல மி 6 கருவியும் பார்சிலோனாவில் தான் அறிமுகம் செய்ய அதிக சாத்தியம் உண்டு. மேலும் விரிவான விவரங்களுக்கு..

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஸ்னாப்டிராகன் 835, 6ஜிபி ரேம் உடன், அடுத்தது நோக்கியா பி1 தான்.?

Best Mobiles in India

English summary
Moto G5 Plus, Nokia 8, LG G6 and other smartphones to expect. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X