மோட்டோ 5 ப்ளஸ் கருவியின் விலை & அம்சங்கள், இவைகளாக இருக்கலாம்.!
எம்டபுள்யூசி2017-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் மோட்டோ 5 ப்ளஸ் கருவியின் இறுதி விலை குறிப்புகள் மற்றும் அம்சங்கள் வெளியாகியுள்ளது.
ஒருவழியாக மோட்டோரோலா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை கருவியான மோட்டோ ஜி போன்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் சுற்று வந்த வண்ணம் உள்ளன. குறிப்பிடத்தக்க வண்ணம் சில நேரங்களில் இக்கருவிகள் பற்றிய லீக்ஸ் செய்திகள் மற்றும் படங்களும் வெளிப்படுத்தப்பட்டு விட்டன மற்றும் சில நேரங்களில் குறிப்பிட்ட சாதனத்தின் சாத்தியமான அம்சங்களும் தெரிய வருகின்றது.
அப்படியாக இன்று சிபியூ-இசெட் பட்டியலில் இடம் பெற்றுள்ள மோட்டோ 5 ப்ளஸ் கருவி சார்ந்த அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் ஆகியவைகளை பற்றிய தகவல்களை பெற்றுள்ளோம்.

ஸ்னாப்டிராகன், டிஸ்ப்ளே
வெளியாகியுள்ள மோட்டோ 5 ப்ளஸ் அக்கருவியில் ஒரு ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி உடனான 4ஜிபி ரேம் எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளடக்க சேமிப்பை பொருத்தமட்டில் 32 ஜிபி கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. உடன் ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.

கேமிரா
கேமிரா துறையை பொருத்தமட்டில் 5எம்பி செல்பீ கேமரா உடன் ஒரு 12எம்பி முதன்மை கேமரா கொண்டிருக்கும் என்கிறது சிபியூ-இசெட் பட்டியல்.

ஆண்ட்ராய்டு, பேட்டரி
மற்றும் நிச்சயமாக இந்த சாதனம் பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும். மற்றும் பட்டியலில் இல்லை என்றாலும் கூட ஒரு 3100எம்ஏஎச் பேட்டரி கொண்டுருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை
விலை நிர்ணயத்தை பொருத்தவரை மோட்டோ 5 ப்ளஸ் அக்கருவி சுமார் ரூ. 20,437/- என்ற விலையை சுற்றி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் மோட்டோ 5 கருவியானது சுமார் ரூ.17,031/- என்ற விலையை சுற்றி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க
ரூ.15,000/-க்குள் கிடைக்கும் டாப் 6 இன்ச் ஸ்மார்ட்போன்கள்.!


Click it and Unblock the Notifications