Motorola கிட்ட இருந்து இப்படி ஒரு Budget Phone-ஐ யாருமே எதிர்பார்க்கல! ஜூலை 11 முதல் SALE!

|

நோக்கியா அளவிற்கு மோட்டோரோலா நிறுவனத்தால் 'நாஸ்டில்ஜிக்' ஃபீலிங்கை, அதாவது "ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.." என்கிற ஃபீலிங்கை வழங்க முடியாது என்றாலும் கூட, மோட்டோரோலாவால் "தற்கால" நோக்கியா ஸ்மார்ட்போன்களை தூக்கி சாப்பிட முடியும்.

சீன ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கத்தால் கடைசி படிக்கட்டில் கூட ஏற முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு இன்னும் கொஞ்சம் டென்ஷனை சேர்க்கும் நோக்கத்தின் கீழ், மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதென்ன மாடல்? என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? எப்போது முதல் விற்பனை? ஏதேனும் அறிமுக சலுகைகள் உண்டா? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்ப்போம்!

மோட்டோ ஜி சீரிஸில் அறிமுகமான புதிய மாடல்!

மோட்டோ ஜி சீரிஸில் அறிமுகமான புதிய மாடல்!

மோட்டோரோலா நிறுவனம் இன்று (அதாவது ஜூலை 4), அதன் ஜி சீரீஸின் கீழ் மோட்டோ ஜி42 (Moto G42) என்கிற பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

இது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் மற்றும் முன்னணி ரீடெயில் ஸ்டோர்களில் இருந்து வருகிற ஜூலை 11 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன?

அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன?

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன், சிங்கிள் 4ஜிபி + 64ஜிபி வேரியண்டின் கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.12,999 என்கிற சலுகை விலையில் விற்பனை செய்யப்படவுள்ள இந்த மாடலின் அசல் விலை ரூ.13,999 ஆகும்.

ஆனால் இந்த சலுகை விலை அனைவருக்கும் அணுக கிடைக்காது. நீங்கள் எஸ்பிஐ கார்டுககளை பயன்படுத்தினால் மட்டுமே ரூ.1000 என்கிற உடனடி தள்ளுபடி / கேஷ்பேக்கை பெறுவீர்கள். ஆக Moto G42 ஸ்மார்ட்போனை SBI வாடிக்கையாளர்களால் ரூ.12,999 க்கு வாங்க முடியும்.

Nothing Phone 1-இன் Nothing Phone 1-இன் "புதிய விலை" விவரம்; ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்!

நம்ப அம்பானி கிட்ட இருந்தும் ஒரு ஸ்பெஷல் ஆபர் இருக்கு!

நம்ப அம்பானி கிட்ட இருந்தும் ஒரு ஸ்பெஷல் ஆபர் இருக்கு!

மேற்குறிப்பிட்ட எஸ்பிஐ வங்கி சலுகையை உங்களால் பயன்படுத்த முடியாதா? கவலையை விடுங்க, ரிலையன்ஸ் ஜியோவிடம் இருந்து கிடைக்கும் ரூ.2,549 மதிப்புள்ள நன்மைகள் இருக்கு!

இதில் ரூ.2000 என்பது ஜியோ ரீசார்ஜ்கள் வழியிலான கேஷ்பேக்காக அணுக கிடைக்கும் மற்றும் ரூ.549 என்பது Zee5 ஆப்பின் ஓராண்டு மெம்பர்ஷிப் மீதான தள்ளுபடியாக அணுக கிடைக்கும்.

மெட்டாலிக் ரோஸ் மற்றும் அட்லாண்டிக் கிரீன் என்கிற இரண்டு கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் Moto G42 ஸ்மார்ட்போன் உண்மையியேயே ரூ.13,000 பட்ஜெட்டிற்கு 'வொர்த்' ஆன போன் தானா?

இந்த கேள்விக்கான பதிலை அறியும் முன், அது வழங்கும் அம்சங்களை பற்றி அறிந்துகொள்ள வேண்டும்!

பட்ஜெட் விலையில் பிரீமியம் லுக்!

பட்ஜெட் விலையில் பிரீமியம் லுக்!

மோட்டோரோலா நிறுவனத்தின் கூற்றுப்படி, ஜி42 ஸ்மார்ட்போனின் பாடி-யில் PMMA மெட்டீரியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக அக்ரிலிக் கிளாஸ் எனப்படும் இது அல்ட்ரா-பிரீமியம் கிளாஸ் ஃபினிஷை கொடுக்கும் நோக்கத்தின் கீழ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 'லைட்' ஆக இருக்குமாம். அதாவது இதன் எடை வெறும் 174.5 கிராம் மட்டுமே இருக்குமாம். இதுதவிர பிரீமியம் மெட்டல் அடிப்படையிலான கேமரா மாட்யூல், IP52 வாட்டர் ரெப்பெல்லன்ட் டிசைனையும் இது பேக் செய்கிறது.

என்னடா இது? OnePlus-க்கு வந்த சோதனை! போயும் போயும் Realme தான் கிடைச்சுதா?என்னடா இது? OnePlus-க்கு வந்த சோதனை! போயும் போயும் Realme தான் கிடைச்சுதா?

டிஸ்பிளே, ப்ராசஸர், ஸ்டோரேஜ் எல்லாம் எப்படி?

டிஸ்பிளே, ப்ராசஸர், ஸ்டோரேஜ் எல்லாம் எப்படி?

டூயல் சிம் (நானோ) சப்போர்ட்டை வழங்கும் Moto G42 ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ கொண்டு இயங்குகிறது. இது 6.4-இன்ச் அளவிலான ஃபுல் எச்டி+ (1,080x2,400 பிக்சல்ஸ்) அமோஎல்இடி டிஸ்ப்ளேவை (20:9 ரேஷியோ, 60Hz ரெஃப்ரெஷ் ரேட்) கொண்டுள்ளது.

இது ஸ்னாப்டிராகன் 680 SoC உடனான அட்ரெனோ 610 GPU மற்றும் 4ஜிபி LPDDR4x ரேம்-ஐ பேக் செய்கிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, Moto G42 ஆனது 64GB uMCP ஸ்டோரேஜை கொண்டுள்ளது, மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக, மெமரியை 1TB வரை நீட்டிக்கும் ஆதரவையும் வழங்கும்.

கேமரா செட்டப் எப்படி?

கேமரா செட்டப் எப்படி?

ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வரும் மோட்டோ ஜி42 ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் (எஃப்/1.8) + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட், டெப்த் ஷூட்டர் + 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டரை வழங்குகிறது. முன்பக்கத்தில், 16-மெகாபிக்சல் (எஃப்/2.2) செல்பீ கேமரா இருக்கும்.

7GB RAM, 50MP கேமரா.. இந்த கம்பெனி கிட்ட இருந்து இப்படி ஒரு பட்ஜெட் Phone-ஆ!7GB RAM, 50MP கேமரா.. இந்த கம்பெனி கிட்ட இருந்து இப்படி ஒரு பட்ஜெட் Phone-ஆ!

கனெக்டிவிட்டி?

கனெக்டிவிட்டி?

4ஜி LTE, வைஃபை 802.11ac, ப்ளூடூத் v5.0, எஃப்எம் ரேடியோ, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எஃப்சி, யூஎஸ்பி டைப்-சி மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களை வழங்கும் இந்த மோட்டோ ஜி ஸ்மார்ட்போன் ஆனது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் வழங்குகிறது.

ஃபாஸ்ட் சார்ஜிங், பேட்டரி எல்லாம் எப்படி?

ஃபாஸ்ட் சார்ஜிங், பேட்டரி எல்லாம் எப்படி?

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், டால்பி அட்மோஸ்-க்கான ஆதரவையும் வழங்கும் இது முன்னரே குறிப்பிட்டப்படி ஐபி52-ரேடட் வாட்டர் ரெப்பெல்லன்ட்டையும் (அதாவது நீர்-விரட்டும் கட்டமைப்பையும்) வழங்குகிறது.

சார்ஜிங் டிபார்ட்மென்ட்-ஐ பொறுத்தவரை, இது 20W TurboPower ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இதை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 30 மணிநேரம் வரை பேக்கப்பை வழங்குமாம்.

ஏன் வாங்கலாம்?

ஏன் வாங்கலாம்?

விலை மற்றும் அம்சங்களை வைத்து பார்க்கும் போது, மோட்டோ ஜி42 என்பது "ரூ.15,000 க்குள் என்கிற பிரிவில்" ஒரு நல்ல போட்டியாளராகத் தெரிகிறது.

இருப்பினும், கூடுதலாக ரூ.500-ஐ கொடுத்தால், மோட்டோ G52 ஸ்மார்ட்போனே வாங்க கிடைக்கும் என்பதால் மோட்டோ G42 மாடல் எந்த அளவிற்கு சிறப்பாக விற்பனை ஆகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நிறைய பெண்கள் கையில் iPhone இருக்குற இந்த நேரத்துல இப்படி ஒரு ஆபத்தா?நிறைய பெண்கள் கையில் iPhone இருக்குற இந்த நேரத்துல இப்படி ஒரு ஆபத்தா?

ஏன் வாங்க கூடாது?

ஏன் வாங்க கூடாது?

இன்னும் மோசமான விடயம் என்னவென்றால், G42 ஆனது G52 வழங்கும் அதே அம்சங்களையே தான் வழங்குகிறது.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கூடுதலாக ரூ.500 கொடுத்து ஜி52 மாடலை வாங்கினால், உங்களுக்கு 90Hz ரெஃப்ரெஷ் ரேட், இன்னும் 'லைட்' ஆன பாடி, சற்றே பெரிய pOLED டிஸ்ப்ளே மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் கிடைக்கும்.

இதே விலையில், இதேபோன்ற அம்சங்களை வழங்கும் வேறொரு நிறுவனத்தின் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் நீங்கள் Redmi Note 11 மாடலை கருத்தில் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Moto G42 Launched in India Under Offer Price First Sale Date on July 11 via Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X