Home
News

அமேசானில் மோட்டோ ஜி கருவிகளுக்கு விலைகுறைப்பு மற்றும் கேஷ்பேக் சலுகை.!

அமேசான் இந்தியா வலைதளத்தில் மோட்டோ ஜி4 மற்றும் மோட்டோ ஜி4 ப்ளே கருவிகள் முறையே விலைகுறைப்பு மற்றும் கேஸ்பேக் சலுகையில் கிடைக்கிறது.

By Muthuraj

லெனோவா இப்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் விற்கும் அதன் மோட்டோ ஜி4 மற்றும் மோட்டோ ஜி4 ப்ளே ஸ்மார்ட்போன்களுக்கு விலைக்குறைப்பை நிகழ்த்தியுள்ளது. 16 ஜிபி மற்றும் 32 ஜிபி என இரண்டு வேரியண்ட்களிலான மோட்டோ ஜி4 வகைகளுமே ரூ 2,000/- தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்கப்படுகின்றன. மறுபக்கம் மோட்டோ ஜி4 ப்ளே கருவியை வாங்க அமேசான் பரிசு அட்டை வடிவத்தில் ரூ.1,000 கேஷ்-பேக் சலுகையாக வழங்கப்படுகின்றது.

மோட்டோ ஜி4 கருவியின் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி வகைகளின் கீழ் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை வண்ண வேரியண்ட் கருவிகளும் தள்ளுபடிகளை பெற்றுள்ளது.

தள்ளுபடி விலை

தள்ளுபடி விலை

அதாவது 16 ஜிபி மற்றும் 32 ஜிபி வகைகள் முறையே ரூ.10.499/- மற்றும் ரூ.11.999/- என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. மோட்டோ ஜி4 வகைகளில் ரிலையன்ஸ் ஜியோ வெல்கம் ஆஃபர் தொகுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடாததக்கது.

ரூ.1000/- கேஷ்-பேக்

ரூ.1000/- கேஷ்-பேக்

மறுபக்கம் மோட்டோ ஜி4 ப்ளே கருவி எந்த விலை குறைப்பும் செய்யப்படவில்லை, ஆனால் அமேசான் கிஃப்ட் அட்டை வடிவில் வாங்குவோர்களுக்கு ரூ.1000/- கேஷ்-பேக் அளிக்கப்படுகிறது. அந்த பரிசு அட்டையைக்கொண்டு பின்னர் அமேசான் இந்தியாவில் இருந்து எந்த பொருளை வாங்கவும் பயன்படுத்த முடியும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கின்டெல் இ-புக், ஏர்டெல் சலுகை

கின்டெல் இ-புக், ஏர்டெல் சலுகை

மேலும், மோட்டோ ஜி4 ப்ளே கருவியை வாங்குவதின் மூலம் கின்டெல் இ-புக் மீது நீங்கள் ஒரு 80 சதவீதம் சலுகையை பெற ,முடியும் (அதிகபட்சமாக ரூ.300/- வரை) மற்றும் ஏர்டெல் வழங்கும் 15ஜிபி அளவிலான தரவை 1ஜிபி விலைக்கு பெறலாம்.

வெல்கம் ஆஃபர்

வெல்கம் ஆஃபர்

உடன் ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபர் அணுகல் ஆனது மோட்டோ ஜி4 ப்ளே கருவி வாங்குவோருக்கும் கிடைக்கும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அமேசான் இந்தியாவில் மட்டுமே பிரத்தியேகமாக கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி4 அம்சங்கள்

மோட்டோ ஜி4 அம்சங்கள்

மோட்டோ ஜி4 (16ஜிபி வேரியண்ட்) ரூ.12,499/- என்ற விலையில் கடந்த ஜூன் மாதம் அறிமுகமானது அதன் 32ஜிபி மாறுபாடு ரூ.13,999/-க்கு அறிமுகமானது.
டிஸ்பிளே : 5.5 முழு எச்டி
ப்ராசஸர் : ஸ்னாப்டிராகன் 617 எஸ்ஓசி
ரேம் : 2ஜிபி
பின்பக்க கேமிரா :13 மெகாபிக்சல்
முன்பக்க கேமிரா : 5 மெகாபிக்சல்
பேட்டரி : 3000எம்ஏஎச்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மோட்டோ ஜி4 ப்ளே அம்சங்கள்

மோட்டோ ஜி4 ப்ளே அம்சங்கள்

ரூ.8,999/- என்ற விலையில் மோட்டோ ஜி4 ப்ளே கருவி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
டிஸ்ப்ளே : 5 அங்குல எச்டி
ப்ராசஸர் : ஸ்னாப்டிராகன் 410 எஸ்ஓசி
ரேம் : 2ஜிபி
பின்பக்க கேமிரா : 8 மெகாபிக்சல்
முன்பக்க கேமிரா : 5 மெகாபிக்சல்
மெமரி : 16ஜிபி (நீடிக்கும் வசதி கொண்ட)
ஆதரவு : 4ஜி வோல்ட்
பேட்டரி : 2800எம்ஏஎச்

மேலும் படிக்க

மேலும் படிக்க

நோக்கியா டி1சி கருவி : இரண்டு சூப்பர் வகைகளில் வெளியாகும்.!?

Best Mobiles in India

English summary
Moto G4 Available With Rs. 2,000 Discount, Moto G4 Play Gets Rs. 1,000 Cashback on Amazon India. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X