லட்டு மாதிரி ஆஃப்பர்.. ரூ.10,000க்கு இப்படி ஒரு போனா? புது நிறத்தில் அசத்தும் Moto G32 எங்க வாங்கலாம்?
இந்தியாவில் ரூ.10,000 விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் மாடலாக அதிகம் விற்பனையான மோட்டோ ஜி32 (Moto g32) சாதனத்தின் புதிய நிற வேரியண்ட் மாடல்களை மோட்டோரோலா (Motorola) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இப்போது இதன் சலுகை மற்றும் விலை விபரத்தை பற்றி பார்க்கலாம்.
மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய பட்ஜெட் செக்மென்ட் மலிவு விலை ஸ்மார்ட்போன் மாடலான மோட்டோ ஜி32 சாதனம் இப்போது புதிய நிறங்களை பெற்றுள்ளது. இதற்கு முன்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் மினெரல் பிளாக் (Mineral Black) மற்றும் சில்வர் க்ரேய் (Silver Grey) நிறங்களில் வாங்க கிடைத்தது.

இப்போது மோட்டோரோலா நிறுவனம் புதிதாக 2 நிறங்களை இத்துடன் சேர்த்துள்ளது. மோட்டோரோலா அறிவித்துள்ள தகவல் மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தின் தகவலை வைத்து பார்க்கையில், மோட்டோ ஜி32 இப்போது ரோஸ் கோல்ட் (Rose Gold) மற்றும் சாட்டின் மெரூன் (Satin Maroon) ஆகிய புதிய நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்தியாவின் அப்போர்ட்டபிள் ஸ்மார்ட்போன் (India's affordable smartphone) மாடலாக இந்த சாதனம் திகழ்கிறது. இது இப்போது பிளிப்கார்ட் வழியாக வெறும் ரூ.10,999 என்ற விலை முதல் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.16,999 ஆகும். ஆனால், இன்று கிடைக்கும் 35% சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ரூ.10,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.
Moto G32 மொபைல் 28 ஜூலை 2022 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் வீதம் 6.50' இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் 1080 x 2400 பிக்சல்கள் (FHD+) தீர்மானம் மற்றும் 20:9 என்ற விகிதத்தை வழங்குகிறது. Moto G32 ஆனது 2.4GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 (Qualcomm Snapdragon 680) என்ற சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 4ஜிபி, 8ஜிபி ரேம் உடன் வருகிறது.

Moto G32 ஆனது Android 12 இல் இயங்குகிறது மற்றும் 5000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. Moto G32 தனியுரிம வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கேமராக்களைப் பொறுத்த வரையில், பின்புறத்தில் உள்ள Moto G32 ஆனது 50 மெகாபிக்சல் (f/1.8) கொண்ட பிரைமரி கேமராவைக் கொண்ட மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
இது 8 மெகாபிக்சல் (f/2.2, அல்ட்ரா வைட் ஆங்கிள்) கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் (f/2.4, மேக்ரோ) கேமராவை அடங்கியுள்ளது. இதன் முன்பக்கத்தில் (f/2.4) உடன் கூடிய 16 மெகாபிக்சல் சென்சாரை கொண்டுள்ளது. மோட்டோ ஜி32 ஆனது ஆண்ட்ராய்டு 12 ஐ அடிப்படையாகக் கொண்டது. இது ஸ்டோரேஜ் அம்சத்திற்கு மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (1024 ஜிபி வரை) விரிவாக்கக்கூடிய அம்சத்தை கொண்டுள்ளது.

இன்டர்னல் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இது 64ஜிபி, 128ஜிபி உள்ளடங்கிய ஸ்டோரேஜ்ஜை கொண்டுள்ளது. மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் 161.78 x 73.84 x 8.49mm (உயரம் x அகலம் x தடிமன்) மற்றும் 184.00 கிராம் எடையுடையது. இது மினரல் கிரே மற்றும் சாடின் சில்வர் வண்ணங்களில் முதலில் வெளியிடப்பட்டது. இப்போது, புதிதாக ரோஸ் கோல்ட் (Rose Gold) மற்றும் சாட்டின் மெரூன் (Satin Maroon) நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
Moto G32 இல் உள்ள இணைப்பு விருப்பங்களை பற்றி பேசுகையில், இது Wi-Fi 802.11 a/b/g/n/ac, ஜிபிஎஸ், ப்ளூடூத் v5.20, NFC மற்றும் USB Type-C ஆகியவை அடங்கும். இது அத்தியாவசிய அணைத்து சென்சார்களையும் மற்றும் கைரேகை சென்சாரையும் கொண்டுள்ளது. Moto G32 ஃபேஸ் அன்லாக்கை ஆதரிக்கிறது. ரூ.10,000 விலையில் பெஸ்டாக ஒரு போனை வாங்க விரும்பினால் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








