Moto G32 போனுக்காக ஏன் எல்லாரும் காத்திருக்காங்க தெரியுமா? மேட்டர் இது தான் பாஸ்.!

|

பட்ஜெட் விலையில் ஒரு பெஸ்டான ஸ்மார்ட்போன் டிவைஸை வாங்க திட்டமிடுகிறீர்களா? அப்போ கொஞ்சம் வெயிட் செய்யுங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை முற்றிலுமாக நிறைவேற்றக் கூடிய ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலை மோட்டோரோலா (Motorola) நிறுவனம் இப்போது உலக ஸ்மார்ட்போன் சந்தையில் Moto G32 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியச் சந்தையிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

புதிய Moto G32 ஸ்மார்ட்போன் அறிமுகம்

புதிய Moto G32 ஸ்மார்ட்போன் அறிமுகம்

பட்ஜெட் விலையில் உங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளை இந்த புதிய Moto G32 ஸ்மார்ட்போன் நிறைவேற்றும் என்பதில் சந்தேகமில்லை. மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள, இந்த புதிய ஸ்மார்ட்போன் டிவைஸ் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் வரும் பட்ஜெட் சார்ந்த ஸ்மார்ட்போனாக ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் டிவைஸ் 4G இயக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மாடலாகும்.

பட்ஜெட் விலையில் சக்தி வாய்ந்த சிப்செட்

பட்ஜெட் விலையில் சக்தி வாய்ந்த சிப்செட்

இந்த புதிய மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் டிவைஸில் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமராக்களை நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் புதிய ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் விலையில் சக்தி வாய்ந்த சிப்செட் உடன் இது இப்போது ஆண்ட்ராய்டு 12 OS உடன் கிடைக்கிறது என்பது சிறப்பான விஷயம். அதேபோல், இந்த ஸ்மார்ட்போன் வேறு என்னென்ன அம்சங்களை நிறுவனம் வழங்கியுள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

Moto G32 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

Moto G32 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

மோட்டோரோலா ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ள புதிய Moto G32 ஸ்மார்ட்போன் ஆனது 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.5' இன்ச் அளவு உடைய LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 90Hz ரெப்ரெஷிங் ரேட் உடன், 405 ppi மற்றும் 20:9 ரேட்ஸியோ உடன் வருகிறது. பட்ஜெட் விலையில் கிடைக்கக்கூடிய சிறந்த டிஸ்பிளே இது என்பது கவனிக்கத்தக்கது. முன்பே சொன்னது போல், Moto G32 ஆனது Snapdragon 680 சிப்செட்டில் இயங்குகிறது.

உருமாறிய Gmail.! இனி உங்கள் இன்பாக்ஸ் லுக்கே மாறபோகுது.. இனி இப்படி தான் Gmail யூஸ் பண்ணனுமா?உருமாறிய Gmail.! இனி உங்கள் இன்பாக்ஸ் லுக்கே மாறபோகுது.. இனி இப்படி தான் Gmail யூஸ் பண்ணனுமா?

பட்ஜெட்டில் 1TB வரையிலான ஸ்டோரேஜா?

பட்ஜெட்டில் 1TB வரையிலான ஸ்டோரேஜா?

இந்த புதிய மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் விருப்பத்தைப் பற்றிப் பார்க்கையில், இந்த சாதனம் 6GB வரை கொண்ட ரேம் அம்சத்துடன், 128GB வரை இயங்கும் இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. ஸ்மார்ட்போன் பயனர்களின் கூடுதல் ஸ்டோரேஜ் நன்மையை ஆதரிப்பதற்காக, நிறுவனம் இந்த டிவைஸ் உடன் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரையிலான எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் பயனையும் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் போனில் 1TB ஸ்டோரேஜ் என்பது பெஸ்டான விஷயம் தான்.

புதிய MOTO G32 போனின் கேமரா அம்சம்

புதிய MOTO G32 போனின் கேமரா அம்சம்

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பற்றிப் பார்க்கையில், புதிய MOTO G32 மூன்று பின்புற கேமராகளுடன் கூடிய ட்ரிபிள் கேமரா அமைப்புடன் வருகிறது. இதன் பிரைமரி கேமரா 50 மெகா பிக்சல் கொண்ட f/1.8 சென்சார் உடன் வருகிறது. இதன் இரண்டாம் கேமரா 8 மெகா பிக்சல் கொண்ட f/2.2 உடைய அல்ட்ரா வைட் சென்சார் உடன் வருகிறது. அதேபோல், இந்த ஸ்மார்ட்போன் மூன்றாவது கேமரா 2 மெகா பிக்சல் f/2.4 உடைய மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அம்மாடி! 12000mah பேட்டரியுடன் Smartphone-ஆ? பேட்மேன் லுக் வேற அள்ளுதே! விலையும் இவ்வளவு கம்மியா?அம்மாடி! 12000mah பேட்டரியுடன் Smartphone-ஆ? பேட்மேன் லுக் வேற அள்ளுதே! விலையும் இவ்வளவு கம்மியா?

டர்போ சார்ஜ் அம்சத்துடன் 5,000mAh பேட்டரி

டர்போ சார்ஜ் அம்சத்துடன் 5,000mAh பேட்டரி

செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, இந்த சாதனம் 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க ஷூட்டரைப் பயன்படுத்துகிறது. முன்பே சொன்னது போல, இந்த டிவைஸ் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்குகிறது. பேட்டரி மற்றும் சார்ஜிங் அம்சங்களைப் பற்றிப் பார்க்கையில் இது 30W டர்போ சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதில் பாதுகாப்புக்காகப் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது. இந்த போனில் பேஸ் அன்லாக் வசதியும் உள்ளது.

இன்னும் சில மிரட்டலான அம்சங்களுடன் அறிமுகமான Moto G32

இன்னும் சில மிரட்டலான அம்சங்களுடன் அறிமுகமான Moto G32

புதிய மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களைப் பற்றிப் பேசுகையில், இந்த புதிய டிவைஸ் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு மைக்ரோஃபோன்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் உள்ள இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் v5.2, GPS, A-GPS, GLONASS, NFC, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB Type-C போர்ட் போன்றவை அடங்கும். இந்த புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

IRCTC பயணிகளுக்கு இப்படி ஒரு புது விதியா? ரயில் பயணிகளே கொஞ்சம் கவனியுங்க! இது ரொம்ப முக்கியம்IRCTC பயணிகளுக்கு இப்படி ஒரு புது விதியா? ரயில் பயணிகளே கொஞ்சம் கவனியுங்க! இது ரொம்ப முக்கியம்

Moto G32 ஸ்மார்ட்போன் விலை என்ன?

Moto G32 ஸ்மார்ட்போன் விலை என்ன?

மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் இப்போது 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இரண்டு வகை மாடல்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பாவில், இது 210 யூரோ என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி இது தோராயமாக ரூ. 16,600 விலையில் தொடங்குகிறது. இந்த சாதனம் வரும் வாரங்களில் லத்தீன் அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் வெளியிடப்படும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது. Moto G32 ஸ்மார்ட்போன் டிவைஸ் மினரல் கிரே, சாடின் சில்வர் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது.

Best Mobiles in India

English summary
Moto G32 Coming Soon To India What To Expect From a Budget Price Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X