விரைவில் அறிமுகமாகும் அசத்தலான மோட்டோ 10 பவர் ஸ்மார்ட்போன்.!
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோ 10 பவர் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அண்மையில் இந்நிறுவனம் மோட்டோ ஜி10 மற்றும் மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மோட்டோ 10 பவர் சாதனம் அதிநவீன அம்சங்களும் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மோட்டோ ஜி 10 பவர் சாதனம் ஆனது Geekbench-ல் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மோட்டோ ஜி 10 பவர் முறையே ஒற்றை கோர் மற்றும் மல்டி கோர் சோதனைகளில் 244 புள்ளிகளையும் 1043 புள்ளிகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோ 10 பவர் சாதனம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி10 மற்றும் மோட்டோ ஜி30 சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ ஜி30 டிஸ்பிளே
மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி இவற்றுள் அடக்கம். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி30 கேமரா
மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார்+ 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் 13எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள் அடக்கம். குறிப்பாக ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ ஜி30 பேட்டரி
மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் 4ஜி, வைஃபை, புளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப் சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
மோட்டோ ஜி10 டிஸ்பிளே
மோட்டோ ஜி10 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 60Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி இவற்றுள் அடக்கம்.

மோட்டோ ஜி10 கேமரா
மோட்டோ ஜி10 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள்; அடக்கம். குறிப்பாக
ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மோட்டோ ஜி10 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் 4ஜி, வைஃபை, புளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப் சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications