எங்கு பார்த்தாலும் மோட்டோ ஜி, அப்படி அதில் என்ன தான் இருக்கின்றது
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி, ப்யூர் ஆன்டிராய்டு 4.4, பின்-ஷார்ப் ஹை டெபனிஷன் ஸ்கிரீன், குவாட்கோர் சிப் மற்றும் குறைந்த விலையில் கிடைக்கின்றது. 2070 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு நாள் முழுக்க பேட்டரி பேக்கப் அளிக்கும் மோட்டோ ஜி விற்பனை இது வரை சிறப்பாகவே இருக்கின்றது எனலாம். அத்தகைய மோட்டோ ஜி ஸ்மார்ட்போனை பயன்படுத்த சில எளிய வழிமுறைகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

மோட்டோரோலா
முதல் முறை மோட்டோ ஜி ஆன் செய்யும் போதே உங்களது கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக் இன் செய்து மோட்டோரோலா டிவைஸ் ஐடியுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதை செய்து முடித்த பின் போன் தொலைந்து விட்டால் அது எங்கு இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

டெவலப்பர் மோடு
உண்மையான மோட்டோ ஜியை பயன்படுத்த டெவலப்பர் மோடு செட்டிங்ஸ் மற்றும் கான்பிகரேஷனை பார்க்க வேண்டும். இதை எனேபிள் செய்ய செட்டிங்ஸ் - அபவுட் போன் - பில்டு நம்பர் ஆகியவற்றை க்ளிக் செய்ய வேண்டும்.

ஸ்கிரீன்ஷாட்
வால்யூம் டவுன் மற்றும் பவர் பட்டன்களை ஒன்றாக அழுத்தினால் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டுவிடும்.

ஸ்கிரீன் விட்ஜெட்
ஆன்டிராய்டின் தனித்துவம் வாய்ந்த அம்சமாக விட்ஜெட்கள் இருக்கின்றன, மோட்டோ ஜியில் இதை எனேபிள் செய்ய போனின் செட்டிங்ஸ் - செக்யூரிட்டி - எனேபிள் விட்ஜெட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

மோட்டோரோலா மைக்ரேட்
இந்த சேவையை பயன்படுத்தி உங்களது பழைய போனில் இருக்கும் தகவல்களை மோட்டோ ஜி போனிற்கு பறிமாறி கொள்ள முடியும்.

ஹெச்டிஆர் மோடு
மோட்டோ ஜி கேமராவில் புகைப்படங்களை துள்ளியமாக எடுக்க ஹெச்டிஆர் மோடை பயன்படுத்தலாம்.

குரல்
மோட்டோ ஜி ஸ்மார்ட்போனை "OK Google" என்று சொன்னால் குரல் மூலம் பயன்படுத்தலாம்.

ஸ்டாக் கூகுள்
மோட்டோ ஜி ஸ்மார்ட்போனில் ஸ்டாக் கூகுள் இன்டர்பேஸ் பயன்படுத்தி ப்ரெத்யேக ஸ்டாக் அனுபவத்தை பெறுங்கள்.

லான்ச்சர்
ஆன்டிராய்டு இயங்குதளத்தின் சாதகமான விஷயமாக இருப்பது அதன் கஸ்டமைசேஷன் சேவைகள் தான். உங்களுக்கு ஏற்ற லான்ச்சர்களை மாற்றியமைத்து கொள்ள முடியும்.

மோட்டோ கேர்
மோட்டோ ஜியின் மோட்டோ கேர் சேவை மூலம் போனில் ஏற்படும் பிரச்சனைகளை சுலபமாக எதிர்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications