மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி: 6ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரியோடு பட்ஜெட் விலை!

|

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்பு, ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஓசி வசதியோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி 5000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இரண்டு நாட்கள் வரை பேட்டரி ஆயுள் நீடிக்கும் என கூறப்படுகிறது.

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது இந்தாண்டு ஜனவரியில் அறிமுகமான மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021-ன் 5ஜி வேரியண்டாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய் ஸ்மார்ட்போனானது குவாட் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. மேலும் இதில் துளை பஞ்ச் கட்அவுட் வசதியோடு செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.
அதேபோல் 5ஜி வேரியண்டின் ஒட்டுமொத்த வடிவமைப்பும் 4ஜி மாடலுக்கு மிகவும் ஒத்ததாக இருக்கிறது. இருப்பினும் தற்போதைய மாடலின் பின்புற கேமராத் தொகுதியில் கூடுதல் சென்சார் இருக்கிறது. மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி வேரியண்ட் ஆனது ஒற்றை ரேம் மற்றும் ஒற்றை உள்சேமிப்பு வேரியண்ட் வசதியோடு வருகிறது. மேலும் இது ஒற்றை வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.

6ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு

6ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி விலை குறித்து பார்க்கையில்., இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விருப்பத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய மதிப்பு ரூ.29,100 ஆக இருக்கிறது. இது ஒற்றை வேரியண்ட் மற்றும் ஒற்றை காஸ்மிக் எமரால்டு வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஜூன் 14 முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச அளவில் கிடைக்கும் தன்மை குறித்த விவரங்களை நிறுவனம் இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை.

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி விவரக்குறிப்புகள்

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி விவரக்குறிப்புகள்

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஒற்றை சிம் (நானோ), ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு இயங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் முழு எச்டி ப்ளஸ் 1,080x2,400 பிக்சல்கள் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 386 பிபி பிக்சல் அடர்த்தி, 20:9 சதவீத திரை டூ பாடி விகிதத்தோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது 6ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக 1டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மெமரி கார்ட் ஸ்லாட் இருக்கிறது.

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி விலை

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி விலை

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா வசதி இருக்கிறது. மேலும் 8 மெகாபிக்சல் இரண்டாம்நிலை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் என மூன்று ரியர் கேமராக்கள் இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது இடது மூலையில் அமைந்துள்ள துளை பஞ்ச் கட்அவுட் வடிவமைப்போடு வருகிறது.

ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள்

ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள்

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இதில் 5ஜி இணைப்பு ஆதரவுகள், டூயல் பேண்ட் வைஃபை, சார்ஜ் செய்ய யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியை அடங்கும். மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் எல்இடி, ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார், ஆக்ஸிலோமீட்டர் மற்றும் கைரோஸ்கோப் ஆகிய ஆதரவுகள் அடங்கும்.

ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு அம்சத்திற்கு

ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு அம்சத்திற்கு

பாதுகாப்பு அம்சத்திற்கு இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் பொறுத்தப்பட்ட கைரேகை ரீடர் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சம் இருக்கிறது. ஸ்மார்ட்போன் பேட்டரி ஆதரவை பொறுத்தவரை இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. இதை ஒரே கட்டணத்தில் முழுமையாக சார்ஜ் செய்யும் போது இரண்டு நாட்கள் வரை பேட்டரி ஆயுள் நீடிக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Moto G Stylus 5G Launched With 6GB RAM, Android 11, 5000 mAh Battery and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X