Home
News

உலகை திரும்பி பார்க்க வைத்த Moto G Stylus 2025.. Samsung-ஐ விட பாதி விலையில் ஸ்டைலஸ் போன்.. விலை என்ன?

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் புதிதாக மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2025 (Moto G Stylus 2025) என்ற ஸ்மார்ட்போனை வரும் மாதத்தில் அறிமுகம் செய்யவுள்ளது. ஸ்டைலஸ் அம்சத்துடன் இயங்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக (budget smartphone with stylus feature) இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய Moto G Stylus (2025) ஸ்மார்ட்போன் சாதனம் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முக்கிய சான்றிதழ் தளங்களில் (certification sites) காணப்பட்டுள்ளது. இந்த போன் பற்றிய முக்கியமான விஷயங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2025 (Motorola G Stylus 2025) ஸ்மார்ட்போன் சாதனம் FCC, IMEI மற்றும் UL சொலுஷன் போன்ற பல முக்கியமான சான்றிதழ் தளங்களில் காணப்பட்டுள்ளது. இத்தனை தளங்களில் ஒரே நேரத்தில் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2025 (Moto G Stylus 2025) ஸ்மார்ட்போன் காணப்படுவதனால், இதன் அறிமுகம் மிக விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகை திரும்பி பார்க்க வைத்த Moto G Stylus (2025).. விலை என்ன?

உலகை திரும்பி பார்க்க வைத்த Moto G Stylus (2025).. Samsung-ஐ விட பாதி விலை:

Moto G Stylus (2025) ஸ்மார்ட்போன் சாதனம் இந்திய தர நிர்ணய ஆணையத்தின் சான்றிதழ் தளத்தில் கூட காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. BIS தளத்தில் Moto G Stylus 2025 ஸ்மார்ட்போன் காணப்பட்டதினால், இதன் வருகை இந்தியாவிலும் மிக விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் விலையில் இந்தியர்கள் மிக விரைவில் ஸ்டைலஸ் போன்களை இ ந்த போனின் அறிமுகத்தை மூலம் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

ஸ்டைலஸ் அம்சத்துடன் இயங்க கூடிய நம்பகமான ஸ்மார்ட்போன்களை தற்போது சாம்சங் நிறுவனம் மட்டுமே இந்தியாவில் வழங்கி வருகிறது. சாம்சங் பிராண்டின் ஸ்டைலஸ் போன்கள் மிகவும் விலை உயர்ந்தவையாக இருக்கின்றன. இந்த போக்கை உடைக்கும் விதத்தில், மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Moto G Stylus 2025 போனை வெறும் ரூ.30,000 பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2025 (Motorola G Stylus 2025):

FCC தலத்தில் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2025 (Motorola G Stylus 2025) ஸ்மார்ட்போன் XT2517-1, XT2517-2, XT2517-3, and XT2517V ஆகிய மாடல் எண்களுடன் காணப்பட்டுள்ளது. இதில் உள்ள XT25 இந்த ஆண்டின் அறிமுக காலவறையை குறிக்கிறது. இந்த போனில் WiFi-6E, 5G NR bands, LTE, GSM, மற்றும் WCDMA போன்ற அம்சங்கள் இடம்பெறும் என்பதை FCC தளத்தின் தகவல் காண்பிக்கிறது.

IMEI தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் Houston என்ற பெயரை மட்டுமே குறிக்கிறது மற்ற தகவல்களை இந்த தளம் காண்பிக்கவில்லை. UL சொலுஷன் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் 4,850mAh பேட்டரி உடன் காணப்பட்டுள்ளது. ஆனால், மோட்டோரோலா நிறுவனம் இந்த Moto G Stylus (2025) போனை 5000mAh போனாக விளம்பரம் செய்யும் என்பது தெளிவாகியுள்ளது. இதே தளத்தில் USB கேபிள் மற்றும் ஸ்டைலஸ் (stylusபி பற்றிய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

Moto G Stylus (2025) விலை என்ன?

Moto G Stylus (2025) ஸ்மார்ட்போன் சாதனம் BIS தளத்தில் XT2517-4 என்ற மாடல் அடையாள எண்ணுடன் காணப்பட்டுள்ளது. இதனால், இந்திய சந்தையிலும் இந்த போனை நாம் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மோட்டோரோலா நிறுவனம் அதன் ஸ்டைலஸ் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ததில்லை என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும், BIS தளத்தில் காணப்பட்டுள்ள தகவல் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கை வழங்கியுள்ளது.

இதன் விலை பற்றி பேசுகையில், Moto G Stylus 2025 சாதனம் 399 டாலர் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது ரூ.34,534 விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் ஸ்டைலஸ் போன்களை விட இது குறைத்த விலையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G Stylus 2025 Spotted On FCC IMEI UL Solution and BIS Site Check Specifications and Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X