Samsung-க்கு போட்டியா Motorola ரிலீஸ் செய்யும் ஸ்டைலஸ் போன்! பட்ஜெட்ல Stylus போன் வாங்கலாமா?
Samsung நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிரபலமடைந்ததற்கு ஒரு முக்கியமான காரணம், அதிலுள்ள ஸ்டைலஸ் பென்னை சாரும். இத்தகைய ஸ்டைலஸ் அம்சத்தை பல நிறுவனங்கள் வழங்குவதில்லை. ஆனால், இப்போது Motorola அதன் புதிய ஸ்மார்ட்போனில் இந்த அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
ஆம், லெனோவாவிற்கு சொந்தமான மோட்டோரோலா நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் பட்டியலில் புதிதாக ஒரு மாடலை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் Moto G Stylus (2023) என்று பெயரிட்டுள்ளது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த சாதனம் ஸ்டைலஸ் அம்சத்துடன் வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த டிவைஸ் பட்ஜெட் விலையில் அறிமுகமாகவிருக்கிறது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் பிரபலமான ரூ.20,000 விலை பிரிவிற்குள் இந்த புதிய Moto G Stylus (2023) சாதனம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.19,999 அல்லது இதற்கும் குறைவான விலையை பெரும் என்று லீக் தகவல்கள் பரிந்துரைக்கின்றன. இந்த Moto G Stylus (2023) ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் பற்றியும், இதன் டிசைன் விபரம் பற்றியும் இப்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் அறிமுகமாக காத்திருக்கும் இந்த புதிய Moto G Stylus (2023) ஸ்மார்ட்போனின் என்னென்ன அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம் என்ற விபரத்தை இப்போது பார்க்கலாம். Moto G Stylus (2023) இன் டிசைன் புகைப்படங்கள் அது வளைந்த பின் பேனலைக் கொண்டிருக்கும் என்பதைக் காட்டுகிறது. இந்த ஸ்மார்ட்போன் தட்டையானது மற்றும் வலது விளிம்பில் இதன் பவர் மற்றும் வால்யூம் பட்டன்களை கொண்டுள்ளது.
பவர் பட்டன் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனருடன் ஒருங்கிணைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த போனில் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட், மைக்ரோஃபோன், ஸ்பீக்கர் கிரில் மற்றும் ஸ்டைலஸுக்கான ஸ்லாட் ஆகியவை கீழே அமைந்துள்ளது. சிம் ஸ்லாட் போனின் இடது விளிம்பில் அமைந்துள்ளது. Moto G Stylus (2023) முன்பக்கத்தில் ஒரு பிளாட் டிஸ்ப்ளே மற்றும் மேல் மையத்தில் ஹோல்-பஞ்ச் கட்அவுட்டை பெற்றுள்ளது.

வரவிருக்கும் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2023 பின்புறத்தில் ஒரு சதுர வடிவிலான கேமரா மாட்யூலைக் கொண்டுள்ளது. இது எல்இடி ப்ளாஷ் உடன் பின்புறத்தில் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இதில் 50MP பிரைமரி கேமரா சென்சார் மற்றும் 8MP அல்லது அதற்கு மேற்பட்ட 2வது கேமராவைக் கொண்டிருக்கும். வரவிருக்கும் மோட்டோ ஜி ஸ்டைலஸ் (2023) ஐபிஎஸ் எல்சிடி பேனலுடன் 6.5 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளேவுடன் வரும்.
குறைந்தபட்சம், இந்த Moto G Stylus (2023) சாதனம் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட மீடியா டெக் ஹீலியோ ஜி88 சிப்செட் மூலம் இந்த சாதனம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 13 ஐ அவுட் ஆப் தி பாக்சில் வழங்கும். இது 10W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்யும்.
Moto G Stylus (2023) நிறம் பற்றி பேசுகையில் இது கிளாம் பிங்க் மற்றும் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ. 17,999 முதல் ரூ.19,999 என்ற விலை புள்ளிக்கு இடையே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மாதத்தில் இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகமாகிறது. பட்ஜெட் விலையில் ஸ்டைலஸ் அம்சத்துடன் கெத்தாக ஒரு புது போன் வேண்டுமென்றால், இந்த Moto G Stylus (2023) போனுக்காக நீங்கள் காத்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications








