வாட்டர் ப்ரூஃப் கொண்டிருக்கும் மோட்டோ ஜி (ஜென் 3)...?
மோட்டோரோலா நிறுவனத்தின் அடுத்து தலைமுறை கருவிகள் ஜூலை மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படும் நிலையில் மோட்டோ ஜி மூன்றாம் தலைமுறை ஸ்மார்ட்போன் குறித்து பல செய்திகள் வெளியாகின.

அதன் தொடர்ச்சியாக மோட்டோரோலா நிறுவனம் சுமார் 192 மூன்றாம் தலைமுறை மோட்டோ ஜி கருவிகளை இந்தியாவிற்கு கொண்டு வந்திருப்பதாகவும் அந்த கருவியில் 2 ஜிபி ரேம், 5 இன்ச் ஸ்கிரீன், 8 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் கருப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது.
முன்னதாக மோட்டோ ஜி (ஜென் 3) ஐபிஎக்ஸ்7 சான்றிதழுடன் வாட்டர் ப்ரூஃப் கொண்டிருக்கும் என்றும் இதன் விலை ரூ.20,000 வரை இருக்கும் என்றும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதோடு புதிய கருவியில் 5 இன்ச் எச்டி ஸ்கிரீன், 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் 64 பிட் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர், 8 அல்லது 13 எம்பி ப்ரைமரி கேமரா 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 2470 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications