மோட்டோ ஜி ஸ்மார்ட்போன் ரூ.10,999 தானாம், நீங்க வாங்கிட்டீங்களா?

Posted By:

மோட்டோ ஜி ஜென் 2 ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் உடனடியாக வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி பெற முடியும். இந்த தள்ளுபடியானது இன்று துவங்கி இம்மாதம் 25 ஆம் தேதி வரை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற நாட்களில் மோட்டோ ஜி ஜென் 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999. இந்த விலையில் இருந்து ரூ.2,000 தள்ளுபடி செய்யப்பட்டு மூன்று நாட்களுக்கு ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் இந்த தள்ளுபடி விலை ப்ளிப்கார்ட் மொபைல் ஆப் பயனாளிகளுக்கு மட்டும் தான் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999

இன்று துவங்கி மார்ச் மாதம் 25 ஆம் தேதி வரை இந்த சலுகை ப்ளிப்கார்ட் தளத்தின் பிக் ஆப் ஷாப்பிங் டேஸ் என்ற விற்பனை மேளா மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இதோடு ஆக்சிஸ் பேங்க் டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி ஜென் 2 கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இது முந்தைய மாடலை விட பெரிய டிஸ்ப்ளே, சிறந்த ஸ்பீக்கர், மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா போன்றவைகளை பெற்றிருக்கின்றது.

 

English summary
Moto G (Gen 2) gets a Rs 2000 price cut to herald Flipkart’s Big App Shopping Days
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot