Home
News

மறைக்கப்படும் 60எம்பி செல்பி கேமரா, டர்போ சார்ஜிங் வசதி: மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 அண்டர் ஸ்க்ரீன் கேமரா எடிஷன்!

மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போன் ஆனது 60 மெகாபிக்சல் அண்டர் ஸ்க்ரீன் செல்பி கேமரா உடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

60 மெகாபிக்சல் அண்டர் ஸ்க்ரீன் செல்பி கேமரா

60 மெகாபிக்சல் அண்டர் ஸ்க்ரீன் செல்பி கேமரா

மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போன் ஆனது 60 மெகாபிக்சல் அண்டர் ஸ்க்ரீன் செல்பி கேமரா உடன் அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போனானது இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.41,900 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

டிஸ்ப்ளேயின் கீழ் மறைத்து வைக்கும் செல்பி கேமரா

டிஸ்ப்ளேயின் கீழ் மறைத்து வைக்கும் செல்பி கேமரா

மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 அண்டர் ஸ்க்ரீன் கேமரா எடிஷன் அதாவது பயன்பாட்டில் இல்லாத போது டிஸ்ப்ளேயின் கீழ் மறைத்து வைக்கும் செல்பி கேமரா உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் உடன் வரும் முதல் சாதனம் இதுவாகும். மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30 அண்டர் ஸ்க்ரீன் கேமரா எடிஷன் ஆனது டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30 போன்றே இருக்கிறது. மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30 அண்டர் ஸ்க்ரீன் கேமரா எடிஷன் ஆனது ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30 அண்டர் ஸ்க்ரீன் கேமரா எடிஷன் ஸ்மார்ட்போனானது 256 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வேரியண்ட்

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வேரியண்ட்

மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30 அண்டர் ஸ்க்ரீன் கேமரா எடிஷன் கேமரா பதிப்பு மற்றும் விலை குறித்த தகவலை பார்க்கலாம். 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வேரியண்ட்டின் விலை இந்திய விலை மதிப்புப்படி ரூ.41,900 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 30 முதல் கிடைக்கத் தொடங்குகிறது. அதேபோல் சீனாவைத் தவிர பிற சந்தைகளில் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 அண்டர் ஸ்க்ரீன் கேமரா எடிஷன் கிடைக்கும் தன்மை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 சாதனத்தின் விலை குறைப்பு

மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 சாதனத்தின் விலை குறைப்பு

மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30 அண்டர் ஸ்க்ரீன் கேமரா எடிஷன் அறிமுகத்தின் மூலம் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 சாதனத்தின் விலை குறைத்து அறிவித்திருக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போன் தற்போது இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.33,500 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போது இதன் விலை ரூ,38,200 ஆக இருந்தது.

இரட்டை 50 எம்பி கேமரா

இரட்டை 50 எம்பி கேமரா

மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30 அண்டர் ஸ்க்ரீன் கேமரா எடிஷன் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) பிஎல்ஓடி டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. 700 நிட்ஸ் வரை உச்ச பிரகாச வரம்பைக் கொண்டிருக்கிறது. ஹூட்டின் கீழ் மோட்டோரோலா ஃபோன் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி பிரதான கேமரா, 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது.

செல்பி மற்றும் வீடியோ வசதி

செல்பி மற்றும் வீடியோ வசதி

செல்பி மற்றும் வீடியோ வசதிகளுக்கு என மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 அண்டர் ஸ்க்ரீன் கேமரா எடிஷன் சாதனத்திந் முன்புறத்தில் 60 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் சிறப்பம்சம் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஆன் ஸ்க்ரீன் பிக்சல்களை பயன்படுத்தி சென்சாரை மறைக்கும் திறன் கொண்ட புதிய டிஸ்ப்ளே மூலம் செல்பி கேமரா மூடிய நிலையில் இருக்கும். மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 அண்டர் ஸ்க்ரீன் கேமரா எடிஷன் ஆனது 256 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது.

68 வாட்ஸ் டர்போபவர் வேகமான சார்ஜிங் ஆதரவு

68 வாட்ஸ் டர்போபவர் வேகமான சார்ஜிங் ஆதரவு

மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 அண்டர் ஸ்க்ரீன் கேமரா எடிஷன் ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2 மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் சென்சார் உள்ளிட்ட ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதியோடு வருகிறது. மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 அண்டர் ஸ்க்ரீன் கேமரா எடிஷன் ஆனது 68 வாட்ஸ் டர்போபவர் வேகமான சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Moto Edge X30 Under Screen Camera Edition Launched With 60MP Selfie Camera, 68W Turbo Power Fast Charging
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X