மோட்டோ ரசிகர்களே உயிர்த்தெழுங்கள்- பிப்.,24 அறிமுகமாகும் மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ- டாப் லெவல் அம்சம்!
மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டுக்கு அதன் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் உள்ள மோட்டோ ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் முதன்மை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். முன்னதாக இந்தியாவில் எட்ஜ் 30 ப்ரோ பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் மோட்டோரோலா டீஸரை வெளியிட்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு மோட்டோ நிறுவனத்தால் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 சாதனத்தின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோரோலா மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ
மோட்டோரோலா மோட்டோ எட்ஜ் 30 ப்ரோவை இந்தியாவில் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. புதிய மோட்டோரோலா எட்ஜ் ஸ்மார்ட்போனானது பிப்ரவரி 24 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மோட்டோரோலா இந்தியாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் புதிய ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் தேதி குறித்து டீஸ் செய்துள்ளது. மோட்டோரோலா இந்தியா வெளியிட்டுள்ள டீசரில் இந்த ஸ்மார்ட்போனில் இதன் டிஸ்ப்ளே இடம்பெற்றிருக்கிறது. "உங்கள் எட்ஜை கண்டுபிடி" என்ற தலைப்பும் இதில் இருக்கிறது.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான அறிகுறி
இது எட்ஜ் சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான அறிகுறியாகும். இந்த பதிவில் நிறுவனம் மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் பிற விவரங்களை நிறுவனம் பகிரவில்லை. மோட்டோ எட்ஜ் 30 ப்ரோவின் காட்சி ஒற்றுமையைக் கொண்டிருக்கிறது என்றாலும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ பிப்ரவரி 24 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ சாதனத்தின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். எட்ஜ் 30 ப்ரோ மோட்டோரோலாவின் சமீபத்திய ஸ்மார்ட்போனாகும். எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் முதன்மை சிப்செட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 செயலி ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. இதே ஸ்மார்ட்போன் வேறு பெயருடன் உலகளவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் சீன மாறுபாடானது, பிளாக் மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வரும் எனவும் உலகளாவிய மாறுபாடு பல வண்ணங்களில் வரும் எனவும் கூறப்படுகிறது.

பாதுகாப்பு அம்சத்துக்கு இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். எனவே மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 அம்சங்களை இதனுடன் ஒப்பிட்டு யூகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ 6.7 இன்ச் எல்இடி முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ டிஸ்ப்ளேவின் முதல் அம்சம் என்னவென்றால், இது 2400 × 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது. மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ டிஸ்ப்ளே 144 ஹெர்ட்ஸ் உயர் புதுப்பிப்பு வீதத்தையும் கொண்டிருக்கும். மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ 576 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதத்தையும் கொண்டுள்ளது. மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் டிஸ்ப்ளே பஞ்ச் ஹோல் கட்அவுட் மற்றும் பாதுகாப்பு அம்சத்துக்கு இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு
இந்திய சந்தையில் மோட்டோரோலாவின் முதன்மை ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை சேமிப்பு விருப்பங்களுடன் வருகிறது. மோட்டோ எட்ஜ் 30 சாதனமானது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் டிரிபிள் கேமரா அமைப்பின் முதன்மை சென்சாராக 50 எம்பி கேமரா இருக்கிறது. அடுத்ததாக 5 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30 ஸ்மார்ட்போனின் செல்பி வசதிக்கு என 60 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30 ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 68 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

விலை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை
இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் ஆகும் என்பதால் இதன் விலை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் சீனாவில் அறிமுகமான மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30 சாதனத்துடன் ஒப்பிட்டு இதன் அம்சங்களை பார்க்கலாம். 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.38,000 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய விலை மதிப்புப்படி ரூ.40,300 ஆகவும் இருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.42,700 எனவும் 12 ஜிபி ரேம் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.47,500 ஆகவும் இருக்கும் என கூறப்படுகிறது.
File Images


Click it and Unblock the Notifications