Home
News

மிரட்டலான மோட்டோ இ6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

மோட்டோரோலோ நிறுவனம் தனது புதிய மோட்டோ இ6 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டலான மோட்டோ இ6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

குறிப்பாக மோட்மோ இ6 ஸ்மார்ட்போன் கருப்பு நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா அமைப்பு மட்டுமே உள்ளது என்பது குறுப்பிடத்தக்கது.

 சிறப்பான டிஸ்பிளே:

சிறப்பான டிஸ்பிளே:

மோட்மோ இ6 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

எதிர்பார்த்த சிப்செட் வசதி:

எதிர்பார்த்த சிப்செட் வசதி:

மோட்மோ இ6 ஸ்மார்ட்போனில் 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட் உடன் அட்ரினோ 505ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அருமையான கேமரா வசதி:

அருமையான கேமரா வசதி:

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி ஒற்றை கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் செயற்கை நுண்ணறிவு அம்சம் மற்றும் கைரேகை சென்சார் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு வசதி:

சேமிப்பு வசதி:

மோட்மோ இ6 சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி மற்றும் விலை:

பேட்டரி மற்றும் விலை:

இந்த ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, 4ஜிவோல்ட்இ, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி
போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக மோட்மோ இ6 சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.10,360-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Moto E6 with 5.5-inch HD+ display, Android Pie launched : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X