ரூ. 9,499 விலையில் இப்படி ஒரு சூப்பர் Moto ஸ்மார்ட்போனா? விற்பனை எப்போது தெரியுமா? தவற விடாதீர்கள்..
மோட்டோ இ 40 இந்தியாவில் அக்டோபர் 12 ஆம் தேதியான இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை நாம் எதிர்பார்த்ததை விட மிகவும் மலிவானதாக அமைந்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைக்குக் கிடைக்கும் தேதியுடன் இப்போது விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிப் பார்க்கலாம்.

மோட்டோரோலா மோட்டோ இ 40 இந்தியாவில் அறிமுகம்
மோட்டோரோலா மோட்டோ இ 40 இன்று அக்டோபர் 12 அன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மோட்டோரோலா போன் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் ஆக்டா-கோர் யுனிசாக் டி 700 சிப்செட் உடன் கூடிய 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மோட்டோ இ 40 கடந்த வாரம் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டது. அது இப்போது இந்தியச் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இது மூன்று பின்புற கேமராக்கள், பின்புறம் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யூனிசோக் T700 ஆக்டா-கோர் சிப்செட்
இது 1.8GHz யூனிசோக் T700 ஆக்டா-கோர் சிப்செட் மூலம் 4GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டோ இ4 ஸ்மார்ட்போனின் உள்ளமைக்கப்பட்ட ஸ்டோரேஜ் 64 ஜிபி உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரத்தியேக கூகிள் அசிஸ்டன்ட் கொண்ட அம்சத்துடன் வருகிறது. இது 5,000 எம்ஏஎச் பேட்டரியை 76 மணிநேர இசை ஸ்ட்ரீமிங், 14 மணிநேர வீடியோ பிளேபேக் மற்றும் 10 மணிநேர வெப் சர்பிங் அம்சத்திற்காக வழங்கும் நீடித்து உழைக்கும் பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது.

மூன்று பின்புற கேமரா அமைப்பு
மோட்டோ இ 40 ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இது 48 மெகாபிக்சல் பிரதான கேமரா சென்சாரை குவாட் பிக்சல் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் ஒரு டெப்த் சென்சார் மற்றும் அர்ப்பணிப்பு மேக்ரோ விஷன் கேமரா ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. குவாட் பிக்சல் தொழில்நுட்பம் கூர்மையான மற்றும் துடிப்பான புகைப்படங்களுக்கு 4x சிறந்த குறைந்த ஒளி உணர்திறனை வழங்குகிறது. இந்த புதிய மோட்டோ இ 4 ஸ்மார்ட்போன் ஃபேஸ் அன்லாக் உடன் பின்புற கைரேகை சென்சார் பேக் செய்கிறது.

1 டிபி வரை ஸ்டோரேஜ் விரிவாக்க வசதி உண்டு
இது IP52 வாட்டர் ரெபெளண்ட் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மோட்டோ இ 40 ஆனது ஆண்ட்ராய்டு 11 மென்பொருளில் விளம்பரமில்லா மற்றும் ப்ளோட்வேர் இல்லாத அனுபவத்திற்காக இயங்குகிறது. மேலும் சேமிப்பு விரிவாக்கத்திற்கான பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் இரட்டை சிம் ஸ்லாட்டை ஆதரிக்கிறது. இது 1 டிபி வரை ஸ்டோரேஜ் ஆதரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ இ 40 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விபரம்
மோட்டோ இ 40 பிங்க் கிளே மற்றும் கார்பன் கிரே வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பிளிப்கார்ட் உறுதி செய்துள்ளது. Moto E40 இன் விலை பற்றி பார்க்கையில், இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெறும் ரூ. 9,499 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை பிளிப்கார்ட் வழியாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications