ஜூன் 2 மோட்டோ இ32எஸ் வெளியீடா?- டிரிபிள் கேமரா, பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்!

|

உறுதியான உடல், பஞ்ச் ஹோல் வடிவமைப்பு, அதீத புதுப்பிப்பு வீதம் மற்றும் பின்புறத்தில் மூன்று கேமரா ஆதரவோடு இடைப்பட்ட விலை வரம்பில் இந்த சாதனம் வருகிறது. நிறுவனம் விரைவில் இந்திாய சந்தையில் மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. கேஜெட் டிப்ஸ்டர் முகுல் ஷர்மா @Stufflistings-ன் டுவிட்டரில் மோட்டோ இ32எஸ் இந்தியாவின் ஜூன் 2 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. லீக்ஸ்டர் இந்தியாவில் வரவிருக்கும் மோட்டோ ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்புற வடிவமைப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், புதிய மோட்டோ சலுகையின் ஆரம்ப விலை ரூ.9299 என கிடைக்கும். இந்த சாதனம் ஜியோ மார்ட் கடைகள், ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகள் மற்றும் பிளிப்கார்ட் மூலமாக வழங்கப்படும்.

மோட்டோ இ32எஸ் சிறப்பம்சங்கள்

மோட்டோ இ32எஸ் சிறப்பம்சங்கள்

மோட்டோ இ32எஸ் ஸ்போர்ட்ஸ் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், 6.5 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி சீரிஸ் எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. மோட்டோ இ32எஸ் சாதனமானது 20:9 என்ற வீதத்துடன் கூடிய 6.5 இன்ச் டிஸ்ப்ளே ஆதரவுடன் வரும். இந்த சாதனம் 1,600 x 720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. ஹூட்டின் கீழ் இந்த சாதனம் 12 என்எம் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த எஸ்ஓசி ஆனது ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியூ உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது. மைக்ரோ எஸ்டி கார்ட் ஆதரவோடு 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்ய முடியும்.

மோட்டோ இ32எஸ் கேமரா ஆதரவுகள்

மோட்டோ இ32எஸ் கேமரா ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இந்த சாதனத்தில் 2 எம்பி டெப்த் ஷூட்டர், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் ஆதரவுடன் 16 எம்பி பிரதான கேமரா ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சாதனத்தின் முன்பக்கத்தில் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என 8 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில், இந்த சாதனத்தில் 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் மூலம் இயக்கப்படுகிறது.

மோட்டோ இ32எஸ் விலை மற்றும் கிடைக்கும் தன்மை

மோட்டோ இ32எஸ் விலை மற்றும் கிடைக்கும் தன்மை

மோட்டோ இ32எஸ் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்த சாதனத்தின் அடிப்படை விலை ரூ.9299 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்லேட் க்ரே மற்றும் மிஸ்டி சில்வர் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. ஜூன் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனானது விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் விரைவில் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி உடன் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த தொழில்நுட்ப வசதி

சிறந்த தொழில்நுட்ப வசதி

மோட்டோரோலா நிறுவனம் ஐரோப்பாவில் புதிய மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போனை மே 25 ஆம் தேதி அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்தது. மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 720×1600 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டிருந்தது. மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்தது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்தது.

Best Mobiles in India

English summary
Moto E32s might be Launched in India on june 2: Expected Price, Specs Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X