ரூ.13,000 விலையில் 48எம்பி டிரிபிள் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ இ32!
மோட்டோ இ32 ஸ்மார்ட்போன் குறித்து பல வதந்தி தகவல்கள் வெளியான நிலையில், நிறுவனம் இறுதியாக ஐரோப்பாவில் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. மோட்டோ இ30 ஸ்மார்ட்போனானது பட்ஜெட் விலைப் பிரிமியல் மேம்பட்ட அம்சங்களோடு அறிமுகம் செய்திருக்கிறது. இந்த மோட்டோ இ32 ஸ்மார்ட்போனானது மையத்தில் பஞ்ச் ஹோல் கட்அவுட், பெரிய பேட்டரி மற்றும் யூனிசோக் சிப்செட் ஆதரவோடு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

மோட்டோ இ32 சிறப்பம்சங்கள்
மோட்டோ இ32 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், மோட்டோ இ32 ஸ்மார்ட்போனானது 1600 x 720 பிக்சல்கள் எச்டி ப்ளஸ் தீர்மானத்துடன் 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு 20:9 என்ற விகித அளவு டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் மையத்தில் பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு வருகிறது. பாதுகாப்பு நோக்கங்களுக்கு என பேஸ் அன்லாக் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதி
இது மோட்டோ இ30 சாதனத்தின் தொடர்ச்சியாக வருகிறது என கூறப்பட்டாலும், மோட்டோ இ30 ஸ்மார்ட்போனானது யூனிசோக் டி700 சிப்செட் ஆதரவோடு 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் உடன் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த மோட்டோ இ32 ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு யூனிசோக் டி606 எஸ்ஓசி வசதியோடு வருகிறது. இந்த சாதனமானது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவோடு வருகிறது. இதன் கூடுதல் சேமிப்பகத்திற்கு என பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதியைக் கொண்டிருக்கிறது. மோட்டோ இ32 ஸ்மார்ட்போனில் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது.

மோட்டோ இ32 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்
மோட்டோ இ32 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இந்த ஸ்மார்ட்போனானது 48 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. மோட்டோ இ32 ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் டோன் டவுன் 8 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 184 கிராம் எடையுடன் வருகிறது. இதில் வாட்டர் ரெசிஸ்டென்ட் அம்சம் கொண்ட ஐபி52 ஆதரவு இருக்கிறது. மோட்டோ இ32 விலை குறித்து பார்க்கையில் இது ஐரோப்பாவில் 159 யூரோக்கள் என அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது இந்திய மதிப்புப்படி இந்த சாதனம் ரூ.13,000 என்ற விலையில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மிஸ்டி சில்வர் மற்றும் ஸ்லேட் க்ரே என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது.

சமீபத்தில் விற்பனைக்கு வந்த மோட்டோ ஜி52
மோட்டோ ஜி52 சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.16,499-ஆக உள்ளது. அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். மேலும் ஜியோ நிறுவனம் சார்பில் இந்த ஸ்மார்ட்போனுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் pOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம்,20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

50எம்பி பிரைமரி கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா
குறிப்பாக மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக டூயல் கேப்சர், ஸ்மார்ட் கம்போசிஷன், ஸ்பாட் கலர், லைவ் மோட்டோ, ப்ரோ மோஷன் மற்றும் அல்ட்ரா-வைட் டிஸ்டோர்ஷன் கரெக்ஷன் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது


Click it and Unblock the Notifications