Home
News

ரிலையன்ஸ் ஜியோ அறிமுக சலுகையுடன் மோட்டோ இ3 பவர் இந்தியாவில் வெளியானது.!!

By Meganathan

இந்திய ஸ்மார்ட்போன் பயனர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ இ3 பவர் இந்தியாவின் குறைந்த விலை பிரிவில் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் எதிர்பார்க்கும் அதிகளவு சக்திவாய்ந்த சிறப்பம்சங்களுடன் அனைவரும் வாங்கக் கூடிய விலையில் சிறந்த 4ஜி ஸ்மார்ட்போனாக மோட்டோ இ3 பவர் இருக்கின்றது. அப்படி இந்தக் கருவியில் என்னென்ன சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்..

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

கைகளில் கச்சிதமாக பொருந்தும் 5இன்ச் எச்டி திரை கொண்ட டிஸ்ப்ளே (720/1280 பிக்சல்), 64-பிட் 1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6735P பிராசஸர் மற்றும் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் (4ஜி+3ஜி) ஸ்லாட் கொண்டிருப்பதோடு ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளமும் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படம்

புகைப்படம்

கேமராவை பொருத்த வரை 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்பீ கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. செல்பீ கேமராவில் அழகிய புகைப்படங்களை வழங்கும் பியூட்டிபிகேஷன் மோடு மற்றும் பிரைமரி கேமரா மூலம் 720 பிக்சல் தரம் கொண்ட வீடியோக்களை எடுக்க முடியும்.

பேட்டரி பேக்கப்

பேட்டரி பேக்கப்

புதிய கருவியில் மோட்டோ இ3 கருவியை விட அதிக பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. அதன் படி மோட்டோ இ3 பவர் கருவியில் 3500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. புதிய மோட்டோ இ3 பவர் கருவியுடன் 10 வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜர் ஒன்றும் வழங்கப்படுகின்றது.

மெமரி

மெமரி

மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்ட 4ஜி எல்டிஇ வசதியும் கருவியை 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 5 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பிளாஷ்ப்ரூஃப் வடிவமைப்பு

ஸ்பிளாஷ்ப்ரூஃப் வடிவமைப்பு

மோட்டோ இ3 பவர் கருவியானது திடீர் மழை மற்றும் நீரில் நனைந்தாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நீரின் மூலம் பாதிக்கப்படாமல் இருக்க வாட்டர்-ரிப்பெல்லண்ட் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை வை-பை 802.11 b/g/n, ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் வி4.0, 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் பிராக்சிமிட்டி, ஆம்பியன்ட் லைட் சென்சார் மற்றும் அக்செல்லோமீட்டர் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

இந்தியாவில் மோட்டோ இ3 பவர் கருவியின் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் இந்தக் கருவியுடன் ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுக சலுகையும் வழங்கப்படுகின்றது. இத்துடன் மோட்டோ பல்ஸ் ஹெட்செட் ஒன்றும் குறைக்கப்பட்ட விலையில் ரூ.499க்கு வழங்கப்படுகின்றது.

விற்பனை

விற்பனை

மோட்டோ இ3 பவர் கருவியானது ரூ.7,999 என்ற விலைக்கு இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றது, மேலும் இந்தியாவில் மட்டும் சுமார் 30 லட்சம் மோட்டோ இ3 பவர் கருவிகள் விற்பனைக்குத் தயார் நிலையில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சலுகை

சலுகை

மோட்டோ இ3 பவர் கருவிகளை வாங்குவோருக்கு எக்ஸ்சேன்ஜ் சலுகையும், எட்டு மாதங்களுக்குச் சிறப்பு தவனை முறை வசதியும் வழங்கப்படுகின்றது. இத்துடன் 32 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.800 வரை கேஷ்பேக் வசதியும் வழங்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Moto E3 Power with Reliance Jio Offer Launched at Rs. 7,999 Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X