மோட்டோ இ3 பவர் ரூ.499/- மட்டுமே?
பண்டிகையைக் காலத்தை முன்னிட்டு பல்வேறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்து வருவதே நமக்கு ஆபத்தாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி ஆன்லைன் மூலம் வர்த்தக நிறுவனங்கள் அதிசயிக்க வைக்கும் தள்ளுபடிகளை வழங்கி வருவதை நன்கு பயன்படுத்திக் கொள்ளப் பயனர்களை விட ஹேக்கர்கள் அதிம் தயாரிகிவிட்டனர்.
வாட்ஸ்ஆப் குறுந்தகவலில் மோட்டோ இ3 பவர் கருவியை ரூ.499/-க்கு வாங்கலாம் என்ற தகவல் வேகமாகப் பரவி வருகின்றது. சந்தையில் புதிதாய் அறிமுகமாகியிருக்கும் இந்தக் கருவியை எப்படி இத்தனை குறைவான விலைக்கு விற்பனை செய்ய முடியும்?

பிளிப்கார்ட்
இந்தியாவின் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் தளத்தின் ‘Flipkart Big Diwali Sale' விற்பனை மூலம் மோட்டோரோலா மோட்டோ இ3 பவர் கருவியை ரூ.499/- செலுத்தி வாங்க முடியும் என்ற தகவல் வாட்ஸ்ஆப்பில் பரவி வருகின்றது.

சலுகை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டுப் பிளிப்கார்ட் தளத்தில் ‘Flipkart Big Diwali Sale' என்ற விற்பனையின் மூலம் ஸ்மார்ட்போன் கருவிகளுக்கு அதிகச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

துவக்கம்
பிளிப்கார்ட் சிறப்புச் சலுகை விற்பனை துவங்கியதும் ரூ.8,000 மதிப்புள்ள மோட்டோ இ3 பவர் ரூ.499க்கு வாங்கச் சொல்லும் குறுந்தகவல் வாட்ஸ்ஆப்பில் வலம் வரத் துவங்கியது.

தளம்
வாட்ஸ்ஆப்பில் வலம் வரும் குறுந்தகவல் லின் கிளிக் செய்ததும் பிளிப்கார்ட் போன்றே காட்சியளிக்கும் இணையதளம் ஒன்று திறக்கும். இங்கு ‘Buy Now‘ என்ற ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது, இதனைக் கிளிக் செய்தால் வேரொரு புதிய தளம் திறக்கும்.

பகிர்வு
பின் நீங்கள் மனிதர் தானா என்பதை உறுதி செய்ய இச்சலுகையினை 8 வெவ்வேறு வாட்ஸ்ஆப் குரூப்களுக்கு அனுப்பக் கோருகின்றது. இந்த ஆப்ஷன் கட்டாயம் பின்பற்ற வேண்டியதாக இருக்கின்றது.

டெலிவரி
குறுந்தகவலை மற்ற க்ரூப்களுடன் பகிர்ந்து கொண்டதும் வேறு ஒரு புதிய தளம் உங்களது ஆர்டரை உறுதி செய்யக் கோருகின்றது. இதனை நிறைவு செய்ததும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த வேண்டும். இங்குக் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் வழங்கப்படவில்லை.

போலி
எல்லாவற்றையும் விட இங்குத் தான் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். பணத்தை முன்பே செலுத்தி விடுவதால் உண்மையில் கருவி நமக்கு வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுகின்றது. இதுவே இந்தச் சலுகை முற்றிலும் போலியானது என்பதை உணர்த்துகின்து.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications