Home
News

நான்கு நாட்களில் இந்தியா வரும் மோட்டோ இ3 பவர்.!!

By Meganathan

லெனோவோ நிறுவனம் மோட்டோ இ3 பவர் எனும் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனினை செப்டம்பர் 19 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மோட்டோ இ3 கருவியும் இதே நாள் அறிமுகம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகின்றது. என்றாலும் செப்டம்பர் 19 ஆம் தேதி லெனோவோ நிறுவனம் ஒரே கருவியை மட்டும் வெளியிடுவது உறுதி எனலாம்.

நான்கு நாட்களில் இந்தியா வரும் மோட்டோ இ3 பவர்.!!

சிறப்பம்சங்களைப் பொருத்த வரை மோட்டோ இ3 பவர் கருவியில் 5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே 720 பிக்சல் ரெசல்யூஷன், 1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6735பி பிராசஸர், 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

டூயல் சிம் ஸ்லாட் கொண்ட மோட்டோ இ3 பவர் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளமும் 4ஜி எல்டிஇ கனெக்டிவிட்டியும் கேமராவை பொருத்த வரை 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இத்தனை அம்சங்களை சக்தியூட்ட 3500 எம்ஏஎச் பேட்டரியும் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

லெனோவோ நிறுவனம் மோட்டோ ஜி4 பிளே எனும் கருவியினை இந்திய சந்தையில் ரூ.8,999 என்ற விலைக்கு அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து மோட்டோ இ3 கருவியின் விலை ரூ.7000க்குள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மோட்டோ இ3 கருவியை லெனோவோ நிறுவம் ஜூலை மாதம் அறிவித்தது. உலகளவில் செப்டம்பர் மாதம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட இந்தக் கருவியில் 2800 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Moto E3 Power to launch in India on Sep 19 Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X