எல்டிஈ கொண்ட மோட்டோ ஈ ஜென் 2 ரூ. 7,999க்கு வெளியானது

By Meganathan
|

மோட்டோரலா நிறுவனம் மோட்டோ ஈ ஜென் 2 எல்டிஈ கொண்ட ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் ரூ.7,999க்கு வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போனினை தற்சமயம் ப்ளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்ய முடியும்.

எல்டிஈ கொண்ட மோட்டோ ஈ ஜென் 2 ரூ. 7,999க்கு வெளியானது

மோட்டோ ஈ ஜென் 2 மற்றும் மோட்டோ ஈ ஜென் 2 எல்டிஈ ஸ்மார்ட்போன்களும் ஆன்டிராய்டு 5.0.2 லாலிபாப் கொண்டு இயங்குகின்றது. 3ஜி கொண்ட மோட்டோ ஈ ஜென் 2 குவாட்கோர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 200 எஸ்ஓசி மற்றும் மோட்டோ ஈ ஜென் 2 எல்டிஈ 64-பிட் 1.2ல ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 எஸ்ஏசி மற்றும் இரு போன்களும் 1 ஜிபி ராம் கொண்டுள்ளன.

இரு ஸ்மார்ட்போன்களும் 4.5 இன்ச் க்யூஹெச்டி டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகின்றது. கேமராவை பொருத்த வரை 5 எம்பி ப்ரைமரி கேமராவும், 1.3 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது. இதோடு 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக மெமரியை 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

எல்டிஈ கொண்ட மோட்டோ ஈ ஜென் 2 ரூ. 7,999க்கு வெளியானது

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை மோட்டோ ஈ ஜென் 2 எல்டிஈ, வைபை, ப்ளூடூத் 4.0LE, GPS/ A-GPS, GLONASS, எப்எம் ரேடியோ மற்றும் மைக்ரோ யுஎஸ்பி வழங்கப்பட்டுள்ளதோடு 2390 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Motorola has launched the Moto E (Gen 2) LTE in India at Rs. 7,999. The smartphone is now up for pre-orders via exclusive online retail partner Flipkart.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X