ஃபிளிப்கார்ட்: மோட்டோரோலா கருவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
மோட்டோ இசெட்2 பிளே ஸ்மார்ட்போனுக்கு தற்சமயம் ரூ.2000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.22,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது, இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது.
தற்சமயம் ஃபிளிப்கார்ட் வலைதளத்தில் Moto Days sale on Flipkart-என்ற பெயரில் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சிறப்பு சலுகை பிப்ரவரி 22-ம் தேதி முதல் பிப்ரவரி 24-ம் தேதி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி விலைகுறைப்ப சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா விலைகுறைப்பு சலுகையுடன் எக்சேஞ்ச் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில நாட்களுக்கு முன்பு வந்த மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன்களுக்கும் அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ இசெட்2 பிளே:
மோட்டோ இசெட்2 பிளே ஸ்மார்ட்போனுக்கு தற்சமயம் ரூ.2000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.22,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது, இந்த
ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது.

மோட்டோ எக்ஸ்4:
மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.20,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.18,999-க்கு
விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோ இ4 பிளஸ்:
மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,499-க்கு விற்பனை
செய்யப்படுகிறது.

மோட்டோ எக்ஸ்4 அம்சங்கள்:
மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.2-இன்ச் முழு எச்டி எல்டிபிஎஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

மோட்டோ எக்ஸ்4 கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.


மோட்டோ இ4 பிளஸ் அம்சங்கள்:
மோட்டோ இ4 பிளஸ் மோட்டோ இ4 பிளஸ் ஆனது ஒரு 5.5 அங்குல (1280 x 720 பிக்ஸல்) எச்டி 2.5டி வளைந்த கண்ணாடி டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் அட்ரெனோ 308 ஜிபியூ உடனான 1.4ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் ஸ்னாப்டிராகன் 427 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 2ஜிபி ரேம் ரேம் மற்றும் 16ஜிபி/ 32ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டது, மேலும் மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் மூலம் விரிவாக்க ஆதரவும் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications