இனி மோட்டோ 360 ஸ்மார்ட் வாட்ச் விலை ரூ.12,999 தான்

Written By:

மோட்டோரோலா நிறுவனம் இன்று மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச்களுக்கான விலையை குறைத்துள்ளது. ரூபாய் 5000 வரை விலை குறைக்கப்பட்ட மோட்டோ 360 ப்ளிப்கார்ட் தளத்தில் ஸ்டாக் இருக்கும் வரை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முன் ரூ.17,999க்கு விற்பனை செய்யப்பட்ட மாடல்கள் ரூ.12,999 வரை கிடைக்கும் என்றும் ரூ.19,999 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த மாடல் இனி ரூ.14,999க்கு விற்பனை செய்யப்படும்.

இனி மோட்டோ 360 ஸ்மார்ட் வாட்ச் விலை ரூ.12,999 தான்

செப்டம்பர் மாதம் 2014 ஆம் ஆண்டு வெளியான மோட்டோ 360, 1.56 இன்ச் பேக்லிட் டிஸ்ப்ளே மற்றும் 320ஷ்ர290 ரெசல்யூஷன் கொண்டுள்ளதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகின்றது. மேலும் 512 எம்பி ரேமும் வழங்கப்பட்டுள்ளது.

மெமரியை பொருத்த வரை 4ஜிபி இன்டர்னல் மெமரியும் ஐபி67 சான்றழிக்கப்பட்ட வாட்டர் ஃப்ரூப் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் அம்சமும் இருக்கின்றது. இதோடு வாய்ஸ் கன்ட்ரோல் சேவை பல அம்சங்களை எளிதாக மேற்கொள்ள உதவுவதோடு ஆன்டிராய்டு 4.3 மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்குதளங்களை கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

English summary
Motorola today slashed the price for its Moto 360 in India. The smartwatch will be available for Rs 5,000 less than the original price on Flipkart.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot