ஆன்லைனில் மொபைல் ரீசார்ஜ் செய்தால் பீட்சா ப்ரீ!

Posted By: Staff
ஆன்லைனில் மொபைல் ரீசார்ஜ் செய்தால் பீட்சா ப்ரீ!

அன்னையர் தினத்தையொட்டி, ஆன்லைனில் மொபைல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை பல்வேறு இணையதளங்கள் வழங்குகின்றன.

இதனால் சிறந்த டாக் டைமினை வழங்கும் ரீசார்ஜினை பெறலாம். வருகிற அன்னையர் தின ஸ்பெஷலாக என்ன பரிசு கொடுக்கலாம், என்று யோசிப்பவர்கள், தங்களது அன்னையருக்கு இது போன்று அதிக டாக் டைமினை கொடுக்கும் ரீசார்ஜ் கூப்பன்களை கொடுக்கலாம்.

இன்று ஒவ்வொருவரும் வேறு வேறு இடத்தில் இருப்பதனால் மொபைலின் தேவை அவசியமாகிறது. இது போன்று சிறந்த டாக் டைமினை வழங்கும் ரீ-சார்ஜ் மூலம் நாளை அன்னையர் தினத்தன்று, அவரவர்கள் அம்மாக்களிடம் அதிக நேரம் பேச முடியும்.

பொதுவாக அம்மாக்கள் பிள்ளைகளிடம் அதிகம் எதிர்பார்ப்பது பேச வேண்டும் என்பது தான். அம்மாக்கள் மட்டும் அல்ல. அனைவருமே எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு, நம்மீது அக்கறை கொள்ளும் நபர்களுடன் பேச வேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒரு விஷயம் தான்.

இந்த விஷயத்தினை சொல்லும் போது நிச்சயம் அடுத்தாக வரும் கேள்வி எந்த ஆன்லைனில் ரீ-சார்ஜ் செய்வது? உதாரணத்திற்கு ஃப்ரீசார்ஜ். இன் இணையதளத்தில் தள்ளுபடியில் ரீ-சார்ஜ் பெறலாம். இப்படி தள்ளுபடியில் ரீ-சார்ஜ் செய்வதன் மூலம், அந்த பணத்திற்கு இணையாக, உணவு கூப்பன்களையும் பெறலாம்.

ரூ.100-க்கு ரீ-சார்ஜ் செய்தால் அதே ரூ.100-க்கு பரிஸ்ட்டா, பீஸா ஹட், டாமினோஸ் போன்றவற்றுக்கான இலவச கூப்பன்களின் மூலம் உணவு பொருட்களையும் பெற்று கொள்ளலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot