ஜூம் ஆன்லைன் வகுப்பு: சுட்டுக் கொல்லப்பட்ட தாய்., என்ன நடந்தது தெரியுமா?
புளோரிடா மாகாணத்தில் ஜூம் ஆன்லைன் வகுப்பில் ஈடுபட்டிருந்த போது திரையில் தெரிந்த காட்சி ஆசிரியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 10 வயது சிறுமி ஆன்லைன் வகுப்பில் இருந்தபோது அவரது தாயார் சுட்டுக் கொன்ற காட்சி அந்த ஜூம் வீடியோ காலில் பதிவாகியுள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு
கொரோனாவைக் கட்டுப்படுத்த தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் மாணவர்களின் படிப்புகள் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு
மாணவர்களுக்கு சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். சில பகுதிகளில் இதற்கு எதிர்ப்பும் எழுந்தும் வருகிறது. காரணம், மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் எனவும் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்கள் இல்லாத மாணவர்கள் எப்படி வகுப்பில் கலந்து கொள்வார்கள் எனவும் கேள்விகள் எழுந்து வருகிறது.

வீடியோ கான்பிரன்ஸ் கால்
வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஏற்றபடி பல தொலைத் தொடர்பு நிறுவனங்களும் டேட்டா சலுகைகளை கூடுதலாக வழங்கி அறிவித்து வருகிறது. அதேபோல் வீடியோ கான்பிரன்ஸ் கால் செய்வதற்கு ஜூம் ஆப் பெரும்பாலானோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு தேவைக்கு பிரதான பயன்பாடு
ஜூம் செயலி என்பது பல்வேறு தேவைக்கும் பிரதான பயன்பாடாக இருக்கிறது. நீதிமன்ற வழக்கு விசாரணையும் வீடியோகால் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. ஜூம் செயலி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தாலும், இதன் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

புளோரிடா மாகாணம் இண்டியா டவுன் பகுதி
இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தில் இண்டியா டவுன் பகுதியில் வசித்து வருபவர் மரிபல் ரொஸார்டோ மொரலஸ். இவர் தனது முன்னாள் காதலனுடன் வாக்குவாதம் ஏற்பட்டதில் விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது. இது அவரது 10 வயது மகளின் கணினி திரையில் பதிவாகியுள்ளது.

முன்னாள் காதலனோடு வாக்குவாதம்
மரிபல் தனது முன்னாள் காதலன் டொனால்டு ஜே வில்லயம்ஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது டொனால்டு ஆத்திரமடைந்து மரிபலை சுட்டுக் கொன்றுள்ளார். இந்த வாக்குவாதம் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபுறம் மரிபலின் 10 வயது மகள் ஆன்லைன் வகுப்பில் இருந்துள்ளார். இந்த வாக்குவாதம் மற்றும் சுட்டுக் கொன்றது தொடர்பான விஷயம் அனைத்தும் ஆன்லைன் காலில் பதிவாகியுள்ளது.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதை அறிந்த ஆசிரியர் அதிர்ச்சி அடைந்ததோடு, இதை மற்ற மாணவர்கள் பார்த்துவிடக் கூடாது என அந்த சிறுமியின் ஆடியோவை மியூட் செய்துள்ளார். மரிபல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டொனால்டை போலீஸார் கைது செய்தனர்.


Click it and Unblock the Notifications