இத்தனை மணிநேரமா இதை பார்த்திருக்காங்க: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் 2020 அறிக்கை!
கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டது. எப்போது திறக்கப்படும் என தெரியாத நிலையையடுத்து தயாரிப்பாளர்கள் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்தனர். இந்த படங்களை வாங்க நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டன.

அமேசான்பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார்
ஸ்மார்ட்போனில் சீரிஸ் பார்க்க தொடங்கிய அனைவரும் அமேசான்பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி சேவைகளில் சந்தாதாரர்களாக இருப்பார்கள். தற்போதைய காலகட்டத்தில் வங்கியில் கூட சிலர் தங்களுக்கென்று கணக்கில்லாமல் இருக்கலாம், ஆனால், அமேசான் பிரைம், நெட்பிலிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற OTT சேவைகளுக்கான தளங்களில் தனக்கென்று ஒரு கணக்கில்லாமல் பெரும்பாலானோர் இருப்பதில்லை.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வெளியீடு
ஓடிடி தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வெளியீடுகளை செய்து வருகிறது. இந்த களத்தில் இந்தாண்டு ஏப்ரல் மாதம்தான் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் என்ற புதிய பிராண்ட் அறிவிக்கப்பட்டது. டிஸ்னி ப்ளஸ் இன் உள்ளடக்கங்கள் அனைத்தும் ஹாட்ஸ்டாருடன் இணைந்து வெளியிடப்பட்டது.

2020 இல் அதிகம் பார்த்தவைகள்
இந்த நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் அதன் சந்தாதாரர்கள் எதை அதிகமாக பார்த்தார்கள் என்ற தகவலை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அதிரடி, நாடகம் மற்றும் காதல் படங்கள் 2020 இல் அதிகம் பார்க்கப்பட்டவையாக தெரிவித்துள்ளது.

அதிகம் பார்க்கப்பட்ட படமாக தில் பெச்சாரா
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தின் புதிய மல்டிப்ளெக்ஸ் பிரீமியர் மூலம் வெளியான தில் பெச்சாரா அதிகம் பார்க்கப்பட்ட படமாக இருந்துள்ளது. இதில் சமீபத்தில் மரணமடைந்த சுஷாந்த் சிங் கதாநாயகனாக நடித்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் ஸ்பெஷல் ஆப்ஸ், மூக்கத்தி அம்மன், ஆர்யா, சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ், குதா ஹஃபீஜ் உள்ளிட்டவைகள் உள்ளன.

ட்ரீம் 11 ஐபிஎல் 2020
அதேபோல் பார்வையாளர்கள் அதிகம் பார்த்தவைகளில் ட்ரீம் 11 ஐபிஎல் 2020 கிரிக்கெட் நேரலை இருக்கிறது. ஐபிஎல் தொடரில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் செப்டம்பர் 19 நடந்த மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி அதிகம் ஸ்ட்ரீம் செய்யப்பட்டவையாக உள்ளது. இந்தியர்கள் 2377 மில்லியன் மணிநேரத்தை கிரிக்கெட் பார்ப்பதில் செலவிட்டுள்ளனர் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

2021 பல வெளியீடுகள்
தொடர்ந்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் 2021 ஆம் ஆண்டில் பல்வேறு புதிய அடக்கங்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் தியேட்டர்களும், ஓடிடி தளங்களும் ஒருங்கிணைந்தே பயணிக்கும் என்றால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.


Click it and Unblock the Notifications