இப்படி ஒரு அறிவிப்பை தான் ஒட்டுமொத்த BSNL பயனர்களும் எதிர்பார்த்தாங்க! என்னது அது?
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட்திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் மற்ற தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவை வழங்கத் தொடங்கிவிட்டன.

4ஜி சேவை
பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் 4ஜி சேவையை கூட வழங்கவில்லை. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மிகப்பெரிய குறையாக இருப்பது 4ஜி சேவையை இன்னும் வழங்காதது தான். குறிப்பாக இந்நிறுவனம் 4ஜி வெளியீட்டில் ஏராளமான தடைகளை எதிர்கொண்டு வருவதாகத்
தெரிகிறது.

பிஎஸ்என்எல் இந்தியா
இந்நிலையில் பிஎஸ்என்எல் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டரில் இந்தியாவில் 4ஜி வெளியீடு பற்றி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களைக் கொண்டு 4ஜி சேவைகள் எப்போது வெளியிடப்படும் என்று தெரிவித்து
இருக்கிறது.

குறிப்பாக இந்திய சந்தையில் 4ஜி சேவைகளை வெளியிட பிஎஸ்என்எல் நிறுவனம் பல மாதங்களாகப் போராடி வருகிறது. ஆனால் இந்நிறுவனம் 4ஜி சேவையை வெளியிடப் பல தடைகளை எதிர்கொண்டு வருகிறது.

எப்போது பிஎஸ்என்எல் 4ஜி வெளியாகும்
இந்நிலையில் பிஎஸ்என்எல் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் எப்போது பிஎஸ்என்எல் 4ஜி வெளியாகும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சரியான தேதியைக் குறிப்பிடப்படவில்லை. குறிப்பாக எப்போது 4ஜி வெளியாகும் என்றுதான்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதில் அளித்த பிஎஸ்என்எல் இந்தியா
அதாவது ட்விட்டரில் பயனர் ஒருவர் பிஎஸ்என்எல் 4ஜி எப்போது அறிமுகம் செய்யப்படும் என்று கேள்வி எழுப்பி இருந்தார். இவருக்கு பதில் அளித்த பிஎஸ்என்எல் இந்தியா, சரியான தேதியை குறிப்பிடுவது கடினமான விஷயம். இதற்குத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் தயாராகி வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாத வாக்கில் சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கலாம் என்று
தெரிவித்து இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் இந்நிறுவனம் கம்மி விலையில் சிறந்த நன்மைகளை வழங்கும் சில திட்டங்களை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.299 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 SMS, உள்ளிட்ட அட்டகாசமான நன்மைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.347 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 54 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா. வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Arena Mobile Gaming Service உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








